ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டை, ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தின் மாஸ்டாங்கில், வெடிக்க செய்தில் ஓடும் ரயிலில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
வெடிகுண்டு தாக்குதல் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து, நடத்தப்பட்டு உள்ளது. ரயில் ராவல்பிண்டியில் இருந்து குவெட்டா வழியாக சென்றபோது, வெடிகுண்டு வெடித்தது.
காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் மோசமான நிலையில் உள்ளனர். ரயில் தண்டவாளம் சேதம் அடைந்து உள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை தொடர்ந்து மாஸ்டாங் மாவட்டம் பயங்கரவாதிகளின் ஊடுருவும் மையப்பகுதியாக இருந்து வருகிறது.
ஏற்கனவே ஜாபர் எக்ஸ்பிரஸ் இதுபோன்ற தாக்குதல்களை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



