டெல்லியில் ப.சிதம்பரம், தங்கபாலு சந்திப்பு: இளங்கோவன் மீது ராகுல் காந்தியுடன் புகார்?

Published:

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவரது வீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு, ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினர். சந்திப்பின்போது,தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த தலைவர்களை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்படுவதாக ராகுலிடம் அவர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இளங்கோவனை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ராகுல் காந்தி வீட்டில் நடந்த சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் கோபிநாத், மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்ததாக தெரிகிறது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img