காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட அன்று அழுதவர்தான் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கான்பூரில் இதுகுறித்து நக்வி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சோனியா காந்திக்கு நாட்டின் மீது பற்றோ, பாசமோ இல்லை. நாட்டின் பெயரைக் கெடுப்பதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். அரசியல் லாபத்திற்காக எப்படி வேண்டுமானாலும் அவர் நாட்டின் பெயரைக் கெடுப்பார் என்றார். 2008-ம் ஆண்டு பட்லா ஹவுஸ் என்கவுன்டரில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டபோது அதற்காக வருத்தம் அடைந்தவர் சோனியா காந்தி. இதை நான் சொல்லவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் கூறியதுதான் இது.
நக்வியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் . இதுதொடர்பாக நக்வியும், பாஜகவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.



