புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வீடு கட்ட வைத்திருந்த ஜல்லியை, திருடியதாக காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்
ஆலங்குடி, படேல்நகரை சேர்ந்தவர் பங்கராஜ், 40, இவர், வீடு கட்டுவதற்காக தனது இடத்தில் ஜல்லியை கொட்டி வைத்திருந்தார்.
இதை ஆலங்குடி பாரதிதாசன் சாலையை சேர்ந்த, இரண்டாவது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சக்திவேல், ரத்தினம்மாள், மற்றும் ரத்தினம்மாளின் மகன்கள் இருவர் சேர்ந்து இரவில் லாரியை வைத்து, ஜல்லியை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதன் மதிப்பு, ரூ. 40 ஆயிரம்.இதுகுறித்து, ஆலங்குடி காவல் நிலையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பங்கராஜ் புகார் செய்தார். நடவடிக்கை இல்லாததால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பங்கராஜ் மனுதாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, காங்கிரஸ் கவுன்சிலர் சக்திவேல், ரத்தினம்மாள் உட்பட 4 பேர் மீது ஆலங்குடி காவல் நிலையத்தினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



