சென்னை: திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயககுமார். அப்போது அவர், கருணாஸ் விவகாரம் குறித்து சில கேள்விகளை முன்வைத்தார்.
ஸ்டாலின் எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்போம் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், கருணாஸின் அவதூறு பேச்சுக்கு ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
என்னை அரிச்சந்திரன் என்று கூறிய கருணாஸ்க்கு நன்றி என்று குறிப்பிட்ட அவர், கருணாஸ் எல்லா சமூகங்களையும் கீழ்த்தரமான முறையில் பேசியது கடும் கண்டனத்துக்கு உரியது என்றார்.
மேலும், கருணாஸ்க்கு நாக்கில் சனி பிடித்துள்ளதாகவும், அதற்கான விளைவுகளை அவர் அனுபவிப்பார் என்றும் கூறினார்.




