சென்னை : டிவி நடிகை நிலானி மீது போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை நிலானி கடந்த 20 ஆம் தேதியன்று சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை அடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் தற்கொலைக்கு முயற்சி செய்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை நிலானிக்கும் உதவி இயக்குனர் காந்தி லலித் குமாருக்கும் இடையில் நெருங்கிய உறவு இருந்தது. இந்நிலையில் லலித் குமார் தன்னை மிரட்டுவதாக போலீஸில் புகார் செய்தார் நிலானி. இதை அடுத்து ஏற்பட்ட பிரச்னைகளில் லலித் குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சூழலியல் காரணமாக கொசுமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார் நிலானி என்று கூறப்பட்டது.




