சந்திரபாபு நாயுடு உருவபொம்மை எரிப்பு
சிவகிரி:
ஆந்திராவில் 20தமிழர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையை கண்டித்து எராளமான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.அதன் தொடர்ச்சியாக நெல்லைமாவட்டம் செங்கோட்டையில் தொலைபேசி அலுவலகத்தை முற்றுகையிட்டு சந்திரபாபு நாயுடு உருவபொம்மையை எரிக்க முயன்ற 15க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வாசுதேவநல்லூர் ஒன்றியம் சிவகிரி பேரூராட்சியில்சந்திரபாபு நாயுடுவின் உருவபொம்மையை எரித்த நாம்தமிழர் கட்சியின்
சீனிவாசன் இசை சி.ச.மதிவாணன்
சாமி.மு கருப்பசாமி உள்ளிட்ட 30 நாம்தமிழர்கள்கட்சியினர்
கைது செய்யப்பட்டனர்.
படம்;மாரியப்பன் -வாசு