December 6, 2025, 4:31 AM
24.9 C
Chennai

தமிழக பட்ஜெட் தாக்கல்! என் குலதெய்வம் ஜெயலலிதா என ஓபிஎஸ்., உரை!

ops budget - 2025

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 – 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான – ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்…

மும்முறை என்னை முதல்வராக்கியவர் ஜெயலலிதா என்று ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார். மேலும், எனது குல தெய்வம் ஜெயலலிதா என்று ஓபிஎஸ் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

வழக்கம் போல், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி’.. என்று தனது பட்ஜெட் உரையில் முதல்வருக்கும் ஓபிஎஸ் பாராட்டு தெரிவித்தார்.

தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 44.176 கோடி என்று பட்ஜெட்டில் தகவல் கூறப்பட்டுள்ளது.

செலவீனங்கள், 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு

வரும் நிதியாண்டில் தமிழக கடன் அளவு 3.97 லட்சம் கோடியாக இருக்கும்

தமிழகத்தின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.16 சதவீதமாக இருக்கும்

தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது

கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனி கவனம் செலுத்த படுகிறது.

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

இந்த நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது.

அரசின் செலவினங்கள் 2 லட்சத்து 8 ஆயிரத்து 671 கோடியாக இருக்கும்.

சமூகப்பாதுகாப்பு, உதவி தொகை வழங்கும் திட்டத்திற்காக 3958 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் படுகிறது.

2018-19 ஆம் ஆண்டுகளில் மாநில பொருளாதார வளர்ச்சி 8.16 சதவீதம் இருக்கும்…

பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு 10,550.85 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

2018-19ல் 8000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

உரிய காலத்தில் பயிர்க்கடன் திரும்ப செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது

வரும் நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர்

விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும்

தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

கால்நடை பராமரிப்பு துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம்…

மீனவர்கள் நலனை பேண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது-ஓபிஎஸ்

மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக 170.13 கோடி ஒதுக்கீடு

பாக் விரிகுடா பகுதியில் 1600 கோடி திட்ட மதிப்பில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

முதல் கட்டமாக 500 இழுவலை படகுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

ராமநாதபுரம் மாவட்டம், பூம்புகார் துறைமுகத்தில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது

420 கோடி செலவில் தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை கட்ட அனுமதி

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, மார்த்தாண்ட துறை ஆகிய இடங்களில் கடல் அரிப்பு தடுப்பான் அமைக்கப்படும்

ஒக்கி புயலுக்கு பிறகு மீனவர்களிடமிருந்து கரையோரத்திற்கு சீரான தொலைதொடர்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது

மீனவர்கள் தகவல் தொடர்புக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள், 18 கட்டுப்பாட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன

ஆபத்து காலங்களில் 200 கடல் மைல் தூரத்திலுள்ள படகுகளை கண்காணிக்க முடியும்

வரும் நிதியாண்டில் மீன்வளத்துறைக்கு, 927.85 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் 745.49 கோடி செலவில் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது

இந்த திட்டத்திற்காக 43 கோடி ஒதுக்கீடு

37 அணைகளில் கட்டமைப்பை புனரமைக்கும் பணிகளை 2வது கட்டமாக மேம்படுத்தப்படும்

அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது

அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு

திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 132.8 கோடி செலவில் செயல்படுத்த முடிவு

2019-20 பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.5983.98 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது


#தமிழ்நாடுபட்ஜெட்
| #தமிழகபட்ஜெட்2019 | #TNBudget | #TNBudget2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories