தீபாவளி ஸ்பெஷல்: அதிரசம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
athirasam 1 - 2026

அதிரசம்

தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி மாவு – 2 கப்,
வெல்லம் – 2 கப்,
தண்ணீர் – 1 கப்,
எண்ணெய் – தேவைக்கு,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

athirasam - 2026

வெல்லத்தைப் பொடித்து, தண்ணீரில் கரைத்து, கல், மண் போக வடிகட்டி, ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி பாகு காய்ச்சவும். முற்றின கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். உடனே அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக பாகில் கொட்டி கை விடாமல் கிளறவும்.

ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறிய மாவை சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும். மறுநாள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை  இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும். தட்டியவற்றை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.

(பச்சை அரிசியை ஊற வைத்து வடித்து, நிழலில் உலர்த்தி, மெஷினில் அரைத்து அதிரசம் செய்தால் மிருதுவாக இருக்கும். அதிரசத்துக்குப் பாகுதான் முக்கியம். ஒரு தட்டில் தண்ணீர் விட்டு 1/4 டீஸ்பூன் பாகை விட்டால் கரையாமல் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம்.)

Posts by Suprasanna Mahadevan:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 1 =