தீபாவளி ஸ்பெஷல்: ஸ்பைசி டைமண்டஸ்!

Published:

Spice - 2026

ஸ்பைசி டைமண்ட்ஸ்

தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப்,

கார்ன் ஃப்ளார் – 2 டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,

ஆம்சூர் பவுடர் – அரை டீஸ்பூன்,

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை,

சாட் மசாலா பவுடர் – ஒரு டீஸ்பூன்,

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவுடன் கார்ன் ஃப்ளார், மிளகாய்த்தூள், சீரகத்தூள், ஆம்சூர் பவுடர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.

அதை சப்பாத்திகளாகத் தேய்த்து விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக்கி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் தூவி கலந்து வைக்கவும்

Related articles

Recent articles

spot_img