
சாத்துக்குடி ரசம்
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – 50 கிராம்,
சாத்துக்குடி. – ஒன்று,
நறுக்கிய கொத்த மல்லித்தழை – ஒரு டேபிள் ஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று,
இஞ்சி – கால் அங்குலத் துண்டு,
உப்பு. – தேவைக்கேற்ப.
தாளிக்க.:
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை.:
குக்கரில் பாசிப்பருப்பை சேர்த்து நீர் விட்டு தோல் சீவி துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்ததும் மசித்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, பருப்புக் கலவை, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு, இறக்கி வைத்து, சாத்துக்குடியை பிழிந்து, கொத்த மல்லித்தழை தூவி பரிமாறவும்.
இந்த ரசத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்தால், சத்தை இழந்து விடும்.