வெஜிடபிள் வடகம்
தேவையான பொருட்கள் : நீர்ப்பூசணிக்காய் – 2 கீற்று,
சௌசௌ – ½ கிலோ,
கேரட் – ½ கிலோ,
பச்சை மிளகாய் – 12,
உப்பு – தேவைக்கு.
அவல் – 1 கிலோ,
பெருங்காயப் பொடி – 1 ஸ்பூன். செய்முறை :
காய்கறிகளை கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், உப்பு இரண்டையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். அவலைக் கழுவி சுத்தம் செய்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, துருவிய காய்கறிகள், அரைத்த விழுது, பெருங்காயப் பொடி அனைத்தையும் ஊறிய அவலில் (நீர் இருந்தால் வடித்து விடவும்). போட்டுக் கலந்து நன்கு பிசையவும். பிளாஸ்டிக் தாள்களைப் பரப்பி, கலவையை உருண்டையாக வைத்து, தட்டைப் போல் தட்டவும். ஒருநாள் காய்ந்தபின் மறுநாள் திருப்பிப் போட்டுக் காயவிடவும்.
வெரைட்டியா செய்யலாம்.. வெஜிடபிள் வடகம்!
Popular Categories



