Spring onion milk moongdal curry - 2026

பால் வெங்காயத்தாள் பருப்பு கூட்டு.

தேவையான பொருட்கள்
1/4 கப் பாசி பயறு
1/2 கப் நறுக்கிய வெங்காயத்தாள்
1/2 கப்பால்
விழுது அரைப்பதற்கு :
1/4 தேங்காய் துருவல்
3பச்சை மிளகாய்
1/2 டீஸ்பூன் சீரகம்
2 டேபிள் ஸ்பூன் பால்
தாளிக்க :
1டீஸ்பூன் எண்ணை அல்லது நெய்
1/4 டீஸ்பூன்கடுகு
1/4 டீஸ்பூன்சீரகம்
1/4 டீஸ்பூன் உளுந்துப்பருப்பு
1வற்றல்
செய்முறை
பாசிப்பயறு நன்கு வறுத்து எடுத்து, ஆறியவுடன் தண்ணீரில் நன்கு கழுவி, குக்கரில் இரண்டு விசில் வைத்துக்கொண்டு எடுக்கவும்.

மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், பால் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அரைத்த விழுதை, வேக வைத்து வைத்துள்ள பருப்பில் சேர்க்கவும். கால் கப் பால், உப்பு கலந்து வேகவிடவும்.

பருப்பு, விழுது வேகும் நேரம் வெங்காயத்தாளை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.தாளின் அடிப்பாக வெங்காயத்தை தனியாக நறுக்கி வைக்கவும்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

கடாயை ஸ்டவ்வில் வைத்து, நெய் சேர்த்து சூடானதும், சீரகம், வற்றல், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாளின் அடிப்பாக வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் எல்லா தாளையும் சேர்த்து வதக்கி வேகும் பருப்பில் சேர்க்கவும்.

ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் நன்கு கலந்து உப்பு சரிபார்த்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி, கடுகு, சீரகம், உளுந்து, வற்றல் தாளித்து சேர்த்து, கொஞ்சம் நறுக்கிய தாளை தூவி அலங்கரிக்கவும்.இப்போது பால் வெங்காயத்தாள் கூட்டு தயார்.

இந்த சுவையான கூட்டு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending