chowchow payasam - 2026

சௌசௌ பாயாசம்
தேவையான பொருட்கள்
1கப் சௌசௌ
தேங்காய்
1கப் வெல்லம்
1 ஏலக்காய்த்தூள்
15 முந்திரிப் பருப்பு
ஒரு கையளவு அவல்
வாழைப்பழம் (பேயன் வாழைப்பழம் சிறந்தது)
15 கிஸ்மிஸ்

செய்முறை

*சௌசௌவை தோல் நீக்கி துண்டு துண்டாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும்.
தேங்காயை துருவி பால் எடுக்கவும் அவலை ஊறவைத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து பேயன் பழத்தையும் அரைக்கவும்.

வெல்லத்தை பொடித்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.
ஏலக்காய் கிஸ்மிஸ் முந்திரிப்பருப்பு மற்றும் அரைத்த கலவைகளை ஒன்றாக கலக்கி சாப்பிடவும். சுவையான இயற்கை பாயசம் ரெடி.

உடல் வளர்ச்சி எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் அளிக்கும் அற்புத பாயசம். நார்சத்துக்கள், புரதம், உடலுக்கு அவசியமான கொழுப்பு சத்து, தாது சத்துக்க. மற்றும் வைட்டமின் சத்துக்களும் நிறைந்தது.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending