மாலை நேரம் ஜோராக சோள வடை!

Published:

corn vada - 2026

சோள வடை
தேவையான பொருட்கள்

1 கப் சிறுசோளம் 6 பச்சை மிளகாய்
•1வெங்காயம்
சிறிது சோம்பு
சிறியத் துண்டு இஞ்சி
ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்
செக்கு கடலை எண்ணெய்
தேவையான அளவு உப்பு

செய்முறை

சிறுசோளத்தை ஆறுமணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவேண்டும்.
நன்கு ஊறியபின் சிறுசோளத்தை மிளகாய், இஞ்சி, சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த மாவில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும்.

மாவு தண்ணீராக இல்லாமல் சற்று கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

செக்கு கடலை எண்ணெயை ஒரு வாணலியில் சூடாக்கிக் கொள்ளவேண்டும்.

மாவுனை சிறு உருண்டைகளாகச் செய்துக் கொண்டு வடைஅளவிற்கு வட்டமாக ஆனால் மெல்லியதாகத் தட்டிக் வாணலியில் மிதமான தீயில் எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சூடாக சுவையான வடை தயார்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Related articles

Recent articles

spot_img