
தினை கேசரி
தேவையான பொருட்கள்:
தினை, சர்க்கரை – தலா 200 கிராம், முந்திரிப்பருப்பு, திராட்சை – தேவையான அளவு,
நெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
செய்முறை:
சிறிதளவு நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு தினைக்கு இரண்டு பங்கு என்கிற கணக்கில் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். தினையுடன் தண்ணீரைச் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். ஒரு வாணலியைச் சூடாக்கி அதில் வெந்த தினையைச் சேர்க்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பின்னர் நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கலவை கெட்டியாகும்வரை கிளறவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கலவை திரண்டு வந்ததும் இறக்கவும். தினை கேசரி ரெடி.