
ராகி முந்திரிப் பக்கோடா
தேவை: ராகி மாவு (கேழ்வரகு மாவு) – 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு – தலா 50 கிராம், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, முந்திரி – 10 (இரண்டாக உடைக்கவும்), சீரகத்தூள் – 2 சிட்டிகை, சமையல் சோடா – ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, வனஸ்பதி – அரை டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் வனஸ்பதியை உருக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி, சீரகத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சமையல் சோடா, மிளகாய்த்தூள் தேவையான உப்பு, உருக்கிய வனஸ்பதி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர்விட்டு மாவைக் கெட்டியாகப் பிசிறி வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பிசிறிவைத்துள்ள மாவைப் பக்கோடாக்களாகக் கிள்ளிப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: வனஸ்பதியைத் தவிர்க்க நினைப்பவர்கள் வெண்ணெய் சேர்க்கலாம். அதேபோல இந்தக் கலவையில் அரைக்கீரை சேர்த்தும் பக்கோடா செய்யலாம்.