ஃப்ரண்ட்ஸ் ட்ரை திஸ் ஃப்ரூட்ஸ் பகாளாபாத்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Fruits Baghlabad
Fruits Baghlabad

ஃப்ரூட்ஸ் பகாளாபாத்

தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப்,
காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப்,
தயிர் – அரை கப்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு,
நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்துக்கள், திராட்சைப் பழ கலவை – ஒரு கப்,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2, எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளிக்கவும். ஒரு பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு வெண்ணெய், உப்பு, தாளித்த பொருட்கள் சேர்த்து நன்கு மசிக்கவும். பிறகு பால், தயிர், சுத்தம் செய்த கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவும். பழக்கலவையை மேலே சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.