குழந்தைகளைக் கவரும் கலர் பூரி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
color puri
color puri

கலர்புஃல் மினி பூரி

தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், ஓமம் – தலா அரை டீஸ்பூன், பீட்ரூட் துருவல் – கால் கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன் (மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைக்கவும்),
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
கொடுத்துள்ள பொருட்களில், எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு, சின்ன பூரிகளாக தேய்த்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துப் பரிமாறவும். பச்சைப் பட்டாணி, கொத்தமல்லித்தழை, பீட்ரூட் சேர்வதால் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருக்கும். பீட்ரூட் பிடிக்காத குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.