
இஞ்சி சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பிரிஞ்சி இலை – ஒன்று
கறுவாப் பட்டை – ஒரு சிறு துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
கொத்தமல்லித் தழை
புதினா
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 குழிக்கரண்டி
அரைக்க:
இஞ்சி – ஒரு சிறு துண்டு
மிளகாய் வற்றல் – 3
பூண்டு – 5 பல்
பெருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
முந்திரி – 5
செய்முறை
தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
அரைக்க வேண்டிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.
தக்காளியைத் தனியாக அடித்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, கறுவாப் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு பொரியவிடவும்.
அதனுடன் கொத்தமல்லித் தழை, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பிறகு அடித்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன் இஞ்சி விழுதைச் சேர்த்து, பச்சை வாசம் போக வதக்கவும்.
கழுவிய அரிசியும் அளவிற்கு உப்பும் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி வழக்கமாக சாதம் சமைப்பது போல் சமைக்கவும்.
வறுவல், அப்பளம், தயிர் பச்சடி போன்றவை இந்த இஞ்சி சாதத்திற்கு ஏற்ற துணை உணவுகள்.