தக்காளித் துவையல்
தேவையான பொருட்கள்:
தோலுரித்த சின்ன வெங்காயம் – அரை கப் தக்காளி – ஒன்று (நறுக்கவும்)
புளி – நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 4 கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்துடன் புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: வெங்காயம், தக்காளியை வதக்கத் தேவையில்லை.