spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஜ, ஷ, ஸ, ஹ, ஶ, க்ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே!

ஜ, ஷ, ஸ, ஹ, ஶ, க்ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே!

- Advertisement -

ஜ, ஷ, ஸ, ஹ, ஶ, க்ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன். மூடர்கள். அறியாமையில் பேசுகின்றனர். தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை, அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர்.

இதில் வருத்தம் இங்கிருக்கும் தமிழர்களுக்கு ய, ர, ற, ன, ண, ந, ள, ழ போன்ற எழுத்துக்களை எங்கு எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்றே தெரியவில்லை.

வட என்பது திசை என்று பொருள்படும். திசைக்கு மொழி கிடையாது. அமே போல் இசைக்கும் மொழி கிடையாது. கவிதைக்குதான் மொழி உண்டு. இதில் தமிழிசை மன்றம் என்பதெல்லாம் சுத்த அபத்தம்.

தமிழகத்தைப் பொருத்தவரை இந்தியாவின் அத்தனை மாநிலங்களும் (கேரளம் தவிர்த்து) வடக்கேதான் உள்ளன. தெலுங்கு, மராடீ, போஜ்புரி, குஜராதீ … அனைத்து மொழிகளும் வட திசையில் பேசப்படும் மொழிகள். இவை எல்லாமே அப்படியென்றால் வடமொழிகள்தான்.

கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்.

இந்த எல்லா மொழிகளிலும் ஜ, ஷ, ஸ, ஹ, ஶ, க்ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்களுக்கு, இந்த சப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு.

தெலுங்கில் జ, స, హ … என்றும் ,
கன்னடத்தில் ಜ, ಸ, ಹ, ಕ್ಷ.. என்றும் ,
மராடீயில் .ज, स, ह, श, क्ष,.. என்றும்
குஜராதியில் જ , સ, હા, ક્ષ , என்றும் ,
பெங்காலியில் জ, স, হা, ক্ষ … என்றும்
ஹிந்தியில் ज, स, ह, श, क्ष,.. என்றும், …. இவ்வெழுத்துக்கள் உள்ளன.

எனவே, நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ஜ, ஷ, ஸ, ஹ, ஶ, க்ஷ, ஸ்ரீ ஆகியவை தமிழ் எழுத்துக்களே.

மொழி என்பது மற்றவருடன் பேசப் பயன்படும் சப்தங்கள் என்றால் எழுத்துக்கள் ஒரு மொழியை எழுதப் பயன்படும் சின்னங்கள் தான் . இதற்கு மேல் இவற்றிற்கு அர்த்தம் இல்லை.

ஜ, ஷ, ஸ, ஹ, ஶ, க்ஷ, ஸ்ரீ இந்த எழுத்துக்களை வித்யாலயங்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், கூடவே இவை ‘வடமொழி எழுத்துக்கள், நம்முடையவை அல்ல’ என்ற ஒரு விஷ விதையையும் விதைக்கிறார்கள்.

இதனால் அபத்தமான பல விளைவுகள் நிகழ்கின்றன. நான் அநுபவித்த சிலவற்றை சொல்கிறேன்..!

கோயம்பத்தூரில் காந்தி நகரில் ஒரு ஷேர் ஆட்டோவின் மேல் ‘ஹேர் ஆட்டோ’ என்று எழுதி இருந்தது . அந்த ஆட்டோவை நிறுத்தி , ‘நீ எழுதி இருப்பதன் அர்த்தம் உனக்குத் தெரியுமா ?’ என்று கேட்டேன் . ‘ஹேர் ஆட்டோ அதாவது மயிறு ஆட்டோ என்று எழுதி இருக்கிறாய் ’ என்றேன் .

தமிழகத்தில் பழரசக் கடைகளில் எல்லாம் ‘ஜீஸ் கிடைக்கும்’ என்று எழுதி இருக்கும். (ஹிந்து அமைப்புக்களின் ‘ஜீ’ க்கள் கிடைக்கும் இடம் என்று அர்த்தம் கொள்ளலாம்.) அவன் சொல்ல விரும்புவது இங்கு ‘ஜூஸ்’ கிடைக்கும் என்பதே. எவனோ ஒரு அரைகுறை, விஷ விதையுடன் சொல்லிக் கொடுக்கப் பட்டதால், இவ்வெழுத்துக்கள் என்னுடையவை அல்ல என்ற அஸ்ரத்தையுடன், சரியாகக் கற்றுக் கொள்ளாத ஒரு பெய்ண்டர் எழுதிக் கொடுத்ததை மாட்டி இருக்கிறான். இவனும் ஒரு அரைகுறை என்பதால். அதைத் திருத்துவது இருக்கட்டும், கவனிக்கவே இல்லை .

ஸ்ரீ என்றால் புகழ், வைபவம், ஒழுக்கம், தைர்யம் என்று அர்த்தம். எவனிடம் இந்த சிறந்த வைபவங்கள் நிவாஸம் செய்கின்றனவோ, வஸிக்கின்றனவோ அவன் ஸ்ரீநிவாஸன். சீ என்றால் குப்பை. Shit. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஸ்ரீநிவாஸன் என்று எழுத வேண்டுமா சீநிவாஸன் என்று எழுத வேண்டுமா என்பதை …!

ஹரி என்றால் அபஹரித்துக் கொள்பவன், மனதைக் கொள்ளை கொள்பவன் என்று அர்த்தம். அரி என்றால் கொன்றவன், வதம் செய்தவன் என்று அர்தம். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ஹரி சரியான பெயரா அரி சரியான பெயரா என்று.

சென்னையில் ஒரு ரயில் நிலையம். த்ரிஶூலம். ஶூலம் என்றால் முள். த்ரி என்றால் மூன்று. த்ரிஶூலம் என்றால் ஈஶ்வரன் ஏந்தி இருக்கும் ஆயுதம் . அந்நிலையத்தில் ஹிந்தியில் சரியாக பெயரை எழுதி இருக்கிறான். ஆங்கிலத்தில் ஸரியாக எழுதி இருக்கிறான். தமிழில் மட்டும் திரிசூலம் (Thiri Choolam) என்று எழுதி இருக்கிறான். அபத்தம் …!

“ஸ்வ” என்றால் என்னுடைய என்று பொருள். ஸ்வதேஶீ என்றால் என்னுடைய தேஶத்தின் என்று பொருள். ‘ஸ்வதேஶீ ஜாகரண மஞ்ச்’ என்ற அமைப்பின் நிகழ்ச்சிக்குப் போனால் வாசலிலும் மேடையின் பின்னணி பேனரிலும் ஹிந்தியில் சரியாக எழுதி இருக்கிறான். ஆங்கிலத்தில் (Swadeshi Jaagarana Manch) என்று சரியாக எழுதி இருக்கிறான். தமிழில் மட்டும் சுதேசீ என்று எழுதி இருக்கிறான். என்ன அர்த்தம்? அபத்தம்.

ஸ்வதேஶம் என்றால் என்னுடைய தேசம் . ஸுதேஶம் என்றால் நல்ல தேஶம். உலகத்தின் எந்த தேஶமும் நல்ல தேஶமாக இருக்க முடியும். ஆனால், ஒரே ஒரு ஸ்வதேஶம் தான் இருக்க முடியும். சுதேசம் ‘Chu’Dhecham என்பதற்கு அர்த்தமே இல்லை..!

ஹிந்து என்றால் ‘ஹிம்ஸையை தூஷிப்பவன்’ என்றும் ‘ஹிம் (பனி ப்ரதேஶம்) இந்து ஸாகரம் இவற்றிற்கு இடையில் உள்ள ப்ரதேஶம், அதில் வாழ்ந்திடும் மக்கள் என்றும் அர்தம். ஆங்கிலத்தில் The Hindu என்று பெயர் வைத்திருக்கும் அமைப்பு அதன் தமிழ் ப்ரதியை இந்து என்று பெயர் இட்டிருப்பதற்கு த்வேஶம், வெறுப்பு அல்லாமல் வேறு காரணம் இருக்க முடியும்..? இந்து முன்னணி என்றால் ‘இந்து’ அதாவது கடல் வாழ் உயிரினங்களுக்காக முன்னணியா?

இந்து என்றால் சந்திரன் என்றும் அர்த்தம். அதாவது தேய்ந்து போகும் உயிரற்ற பாறை. “நான் ஒரு ஹிந்து” ஆனால் நான் இந்து இல்லை. ஹிந்து என்னும் வார்த்தைகளை உபயோகப் படுத்தலாமாம். ஆனால், அந்த எழுத்துக்களைப் பயன்படுத்த மாட்டார்களாம்.

இவ்வாறு உச்சரிப்பைக் கொச்சைப்படுத்தி எழுதுவதற்கு மற்றொரு அர்த்தமும் உண்டு. “இந்த உச்சரிப்பு உனக்கு வராது. உன்னால் கொச்சையாக உச்சரிப்பதுதான் இயலும். அதனால் சுலபமாக்கித் தருகிறேன், கொச்சைப் படுத்தித் தருகிறேன்” என்று நம்மைப் பார்த்து ஏளனத்துடன் கூறுகிறார், இவ்வாறு எழுதுபவர்கள். இது நம்மை அவமானப் படுத்துதல் என்று நான் கருதுகிறேன்..!

ஜ, ஸ, ஹ என்ற இந்த எழுத்துக்களைப் பார்த்தவுடன் BP எகிறி விடுகிறது. அலர்ஜி ஏற்பட்டு உடல் எல்லாம் அரிப்பு ஏற்பட்டு விடுகிறது. சீறி எழுந்து போர் தொடுக்கக் கிளம்பி விடுகிறோம். ஸமீபத்தில் கல்யாண Invitation அடிக்க ஒரு ப்ரிண்டரிடம் அமர்ந்திருந்தேன். ஸ்ரீ என்று நான் எழுதும் இடங்களில் ‘ஏன்..? திரு என்று எழுதக் கூடாதா?’ என்றார். அச்சடித்துக் கொடுக்கும் உன் வேலையை மட்டும் செய். தேவையற்ற விஷயங்களில் தலையிடாதே’ என்று கூற விரும்பினாலும் பல நாட்கள் பழகிய நபர் என்பதால் அடக்கிக் கொண்டேன்.

இதில் ஜனவரியை சனவரி யாக்கிவிட்டனர்.
ஆகஸ்டை ஆகத்து வாக்கிவுட்டனர்.

அப்படியானால் ஜவஹருல்லாவை சவகருல்லாவாக மாற்றுவார்களா..?

வெறுப்பு நல்லதில்லை. எவர் மேல் அல்லது எந்த விஷயத்தின் மேல் வைக்கப்படுகிறதோ, ஏவப்படுகிறதோ அந்த நபருக்கும் அந்த விஷயத்திற்கும் வெறுப்பினால் நஷ்டம் இல்லை. ஆனால், வைத்திருப்பவனை வெறுப்பு அழித்து விடும். ஜாக்ரதை.

மேலும், வெறுப்பு தாழ்வு மனப்பான்மையின் ஒரு அடையாளம்..!

அவார்டுகளையும், பொது மேடைகளையும் கொஞ்சம் மறந்துவிட்டு நம் இலக்கிய, தமிழ் ஆர்வலர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா..?


ராம்கோபால்ரத்னம் ப்ளாகிலிருந்து… https://niraamaya.blogspot.com/

1 COMMENT

  1. போலி தமிழர் பேச்சு இப்படித்தான் இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe