சமீபத்தில் மராத்திய மொழியில் ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ் (Tukadoji Maharaj) எழுதிய ‘கிராம் கீதா’ ( Gram Geeta) படித்தேன்.
அதில் மகளிர் முன்னேற்றம் என்ற தலைப்பில், துகடோஜி மஹாராஜ், “பெண்களின் முன்னேற்றம்’ என்பது அவர்களின் முயற்சியாலேயே அடைய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
என்ன ஒரு அருமையான கருத்து(!).
இதனைப் படித்தவுடன் எனக்கு பெண்கள் பற்றி தோன்றியவற்றை ஒரு கவிதையாக வாசகர்களுடன் உலக மகளிர் தினத்தன்று பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
புறப்படு பெண்ணே!
அறிவின் துணையோடும்,
ஆற்றலையும் கைக்கோர்த்து,
இமயத்தின் பலத்தோடும்,
ஈர உணர்வுடணும்,
உரிமைக்காக
குரல்கொடுத்தும் ,
ஊருக்காக
போராடியும்,
எண்ணியதை முடித்தும்,
ஏற்றமுடன் முன்னேறியும்,
ஐம்பூதங்களை பாதுகாத்தும்,
ஒளிமயமான
சமுதாயத்தை
ஓங்குடன்
படைக்கப்
புறப்படு
பெண்ணே
புவியசைக்க.
ஜெயஸ்ரீ எம். சாரி,
நாக்பூர்.




