சிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் ! விரைவில் அம்பலமாகும் உண்மைகள் ?

சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் எஸ்ஆர் பல்கலை கழகத்திற்கு நேரடியாகச்சென்று இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுபினரான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பச்சைமுத்துவுக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம்.பல்கலைகழகம் இயங்கி வருகிறது, இங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது

இங்கு மருத்துவம், பொறியியல் உட்பட ஏராளமான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதை தவிர மிகப்பெரிய ஆஸ்பத்திரியும் இந்த வளாகத்துக்கு உள்ளேயே செயல்பட்டு வருகிறது.

இங்கு படிப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். இதில் நிறைய பேர் வசதியான வீட்டு பிள்ளைகள்தான். இதனால் இவர்கள் தங்குவதற்காக ஹாஸ்டலும் எஸ்ஆர்எம்முக்கு உள்ளது.வெளிமாநில மாணவர்களுக்கு போதை வஸ்த்துக்கள் வழங்கப்படுகிறது, போன்ற சர்ச்சைகள் அவ்வப்போது எழும்பி பின் அடங்கிவிடுவது வழக்கம், இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் , பல்கலை கழகத்தையே ஆட்டம் காணும் அளவிற்கு உருவெடுத்துள்ளது.பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி பொறியியல் பயின்று வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச்சேர்ந்த அனுப்பிரியா (21) என்ற மாணவி கடந்த மே மாதம் 26 ஆம் தேதி விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்,

எஸ்.ஆர்.எம்.பல்கலை., 10வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!

அதற்கு மறுதினமே, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனித் செளத்திரி (19) என்ற மாணவர் விடுதியின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதனையடுத்து ஒரு மாதம் இடைவெளியில் கடந்த ஜீலை 15 ஆம் தேதியன்று கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தர்சன் (18) என்ற மாணவர் அதே பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த மூன்று மரணங்களும் ஆரம்பத்தில் தற்கொலை என்று கருதப்பட்டாலும் பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

தற்கொலையின் தலைமையிடம் எஸ்.ஆர். எம்.? மேலும் ஒரு மாணவன் தற்கொலை!

அதனடிப்படையில், இந்த வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறைக்கு அதாவது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த ஜூலை 17 ஆம் தேதி தமிழக காவல்துறை இயக்குனர் திருபாதி உத்தரவிட்டார்.அந்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி எஸ்.பி. மல்லிகா தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் எஸ்ஆர் பல்கலை கழகத்திற்கு நேரடியாகச்சென்று இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இறந்த மாணவர்களின் நண்பர்கள், மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், காவல் துறைக்கு தகவல் சொல்லப்பட்ட நேரம் சொன்னவர் யார், கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் மரணம் தொடர்பாக சக மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் விவரங்களை சேகரிப்பதுடன், அங்கு மூலைமுடுக்கு விடாமல் விரிவான விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விரைவில் மாணவர்களின் மரணத்தில் உள்ள உண்மை வெளியில் வரும் என்றும் சிபிசிஐடி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

 

 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...