பச்சைக் குழந்தை.. கொதிக்கும் பால் கொட்டி.. நேர்ந்த விபரீதம்!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள்
baby 1 - 2026

சென்னை அபிராமபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகனான 11 மாத குழந்தை தர்ஷன். நேற்றிரவு தர்ஷன் தாயார் காயத்ரி அடுப்பில் பால் காய்ச்சி கொண்டிருந்தார். பால் பாத்திரத்தை அடுப்பில் இருந்து எடுத்த போது 11 மாத குழந்தை தர்ஷன் தவழ்ந்து வந்து காயத்ரியின் சேலையை பிடித்து இழுத்தாக தெரிகிறது.

milk - 2026

அப்போது கை தவறி பால் பாத்திரத்தை கீழே போட்டார். கொதிக்கும் பால் குழந்தை மீது பட்டதில் உடல் வெந்தது. உடனே சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.