31-03-2023 11:39 PM
More

    இந்த செய்தியை / கட்டுரையை ஆங்கிலத்தில் அல்லது மற்ற இந்திய மொழிகளில் படிக்க…

    பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்!

    பிரபல நடிகை ‘நல்லெண்ணெய்’ சித்ரா திடீரென உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    80களில் அறிமுகமாகி 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் ‘நல்லெண்ணெய்’ விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு ‘நல்லெண்ணெய்’ சித்ரா என்ற பெயரில் சினிமா வட்டாரத்தில் ஏற்பட்டது.

    கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா.

    chithra 2
    chithra 2

    கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ‘சேரன் பாண்டியன்’ ‘ஊர்காவலன்’ ‘என் தங்கச்சி படிச்சவ’ ‘வெள்ளையத்தேவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்த சித்ரா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ’ஆட்ட கலசம்’ படம் மூலம் ஹீரோயின் ஆனார்.

    கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார்.

    chithra
    chithra

    இந்த நிலையில் நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அவரது வீட்டில் சித்ரா காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    20 − 19 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,646FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-