இறக்குமதி மணலை விற்பனை செய்யும் உரிமை பொதுப்பணித் துறைக்கே உண்டு என்று புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
இறக்குமதி மணல் விவகாரத்தில் விதிகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில், விதிகளில் திருத்தங்கள் கொண்டு வந்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சிறு கனிமச் சலுகை விதிகளைத் திருத்தி வெளியிட்டுள்ள அரசாணையில், பொதுப்பணித் துறை தவிர வேறு யாருக்கும் பிற நாடுகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க உரிமை இல்லை. மணல் விற்பனை உரிமை மாநில அரசின் பொதுப்பணித்துறையிடமே இருக்கும். பொதுப்பணித் துறையின் குறிப்பீடுகளை நிறைவு செய்யாத மணலைத் தமிழகத்தில் இருந்து கடல்வழியாகவே அப்புறப்படுத்த வேண்டும்.
எவரும் இறக்குமதி மணலை அவருடைய சொந்தப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லக் கூடாது, அல்லது வேறு மாநிலத்தில் விற்கக் கூடாது. இறக்குமதி மணலை இருப்பு வைக்கும் உரிமை பொதுப்பணித்துறையிடமே இருக்கும்.
இறக்குமதி மணல் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். யார் மணலை இறக்குமதி செய்தாலும் அதைப் பொதுப்பணித்துறைக்கு மட்டுமே விற்க வேண்டும்.
பொதுப் பணித் துறையின் அனுமதியின்றி இறக்குமதி மணலை துறைமுகத்தில் இருந்து கிடங்குகளுக்குக் கொண்டுசெல்லக் கூடாது. இந்த விதிகளை மீறுவோருக்கு இரண்டாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
– என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
கோலை எடà¯à®¤à¯à®¤à®¾à®²à¯à®¤à®¾à®©à¯ கà¯à®°à®™à¯à®•à¯ ஆடà¯à®®à¯.