ஜெகதீஸ் துரை கொலைக்கு காரணமானவர்களை கைது செய்க: வைகோ

policeman murder sand mafia - 2026நெல்லை மாவட்டம், நான்குநேரி – பரப்பாடி பகுதியில் நள்ளிரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்பட்டு வருகிறது என்றும், அதைத் தடுக்க சம்பவ இடத்திற்கு உடனடியாகப் புறப்பட்டுச் செல்லுமாறும் விஜயநாராயணம் காவல்நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (06.05.2018) இரவு விஜயநாராயணம் காவல் நிலைய உளவுப் பிரிவு காவலர் ஜெகதீஸ் துரை சென்றுள்ளார். மணல் கடத்தல் கும்பல் தாக்கியதில் காவலர் ஜெகதீஸ்துரை கொல்லப்பட்டதாக இன்று (07.05.2018) காலை சுமார் 6 மணி அளவில் அவரது துணைவியார் திருமதி மரியரோஸ் மார்க்ரெட் அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

காவல்துறையும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனை அருகில் சிந்தாமணி கத்தோலிக்க சபை அருட் தந்தை குழந்தை ராஜன் தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் சிந்தாமணி சுற்றுவட்டார மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசும், நெல்லை மாவட்டக் காவல்துறையும், விரைந்து செயல்பட்டு, காவலர் ஜெகதீஸ் துரையின் படுகொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்திட வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் கோரிக்கைகள் எழுத்து மூலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

கொலையுண்ட 32 வயது நிரம்பிய காவலர் நேர்மையாகப் பணியாற்றக் கூடியவர். அவருக்கு மூன்று வயதில் ஜோயல் என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவனை இழந்துவிட்ட சகோதரி மரியரோஸ் மார்க்ரெட் 5 மாத கர்ப்பிணி என்பது இதயத்தைப் பிளக்கும் சோகச் செய்தியாகும்.

தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், தனது கணவர் காவல்துறையில் உள்ள சில அலுவலர்களாலும், சட்ட விரோத மணல் கடத்தல் கும்பலாலும் பணியின் போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்குக் காரணமான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அப்பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகள் கைது செய்யப்பட வேண்டும். தமது கணவர் பணியில் வீர மரணம் அடைந்ததாகக் கருதி, குடும்பப் பாதுகாப்பு நிதி ஒரு கோடி வழங்கிட வேண்டும். எம்.காம்., பி.எட். படித்துள்ள தமக்கு அரசு ஆசிரியை பணி வழங்கிட வேண்டும். தமது மகன் ஜோயல் மற்றும் வயிற்றில் இருக்கும் தமது குழந்தையின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட எழுத்துபூர்வமாக தங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் எனவும் திருமதி மரியரோஸ் மார்க்ரெட் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

காவலர் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த 10 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை ஏற்கத்தக்கது அல்ல, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட உத்தரவிட வேண்டும்.
கணவரைப் பறிகொடுத்த இளம் விதவை திருமதி மரியரோஸ் மார்க்ரெட் தெரிவித்துள்ள கோரிக்கைகள் முழுவதையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன. 

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories