நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநர் நியமித்த சந்தானம் குழுவின் விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
ஆளுநர் நியமித்துள்ள சந்தானம் குழுவுக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. என்று கூறியது நீதிமன்றம்.
செல்வகோமதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் நீதிபதிகள் கோவிந்தராஜ் , சாமிநாதன் ஆகியோர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தனர்.