தாமிரபரணி யில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை தென்காசி வந்தார். அவரை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென்மண்டல ஜ.ஜி மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் வரவேற்றனர்.
உ.பி.யில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா போல தமிழகத்தில் 144 ஆண்டுகளுக்ககு பின் தாமிரபரணியில் புஷ்கர விழா இன்று நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு முன்னிட்டு தாமிரபரணி நதியில் நீராட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து துறவிகள், சித்தர்கள், ஆன்மீகவாதிகள் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வருகை தந்துள்ளனர். தாமிபரணி மகா புஷ்கர விழா இன்று துவங்கி 12 நாட்கள் நடக்கிறது.
இந்தநிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ளவதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை தென்காசி ரயில் நிலையம் வந்தார். அவரை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென் மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன், மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அவர் கார் மூலம் குற்றாலம் சென்றார். அங்கு உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் சிறிது நேரம் தங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொள்ளவதற்காக பாபநாசம் சென்றார்.
தமிழக ஆளுநர் வருகையையொட்டி, தென்காசி, குற்றாலம் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



