Homeஉள்ளூர் செய்திகள்செங்கோட்டை அருகே பரபரப்பு: இருதலை மணியன் பாம்பு பிடிப்பட்டது!

செங்கோட்டை அருகே பரபரப்பு: இருதலை மணியன் பாம்பு பிடிப்பட்டது!

IMG 20190226 214909 - Dhinasari Tamilசெங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு – மீனாட்சிபுரம் சாலையில் உள்ள உன்னிமாயா வைத்திய சாலையில் அரிய வகை இரு தலை மணியன் பாம்பு பிடிபட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டாரப்பகுதிகளில் ஏராளமான அரியவகை மூலிகைகளும், அரிய வகை ஊர்வன வகையினங்களும், பறவையினங்களும் நிறைந்து காணப்படுகிறது.

IMG 20190226 215354 e1551199810389 - Dhinasari Tamil

இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் – பாலோடு பகுதியில் மிகவும் பிரபலமான இயற்கை வைத்தியர் மருத்துவர் உன்னி வைத்தியர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு – மீனாட்சிபுரம் – தேன்பொத்தை ரோட்டில் உன்னிமாயா இயற்கை வைத்தியசாலையை நடத்தி வருகிறார்.

IMG 20190226 215456 e1551199851160 - Dhinasari Tamilஅவருக்கு சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் இன்று மாலை இரு தலைமணியன் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்ட அவர் இது குறித்து செங்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

Screenshot 20190226 214604 e1551199883620 - Dhinasari Tamilஇதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த குற்றாலம் வனச்சரகர் ஆரோக்கியசாமி அறிவுத்தலின்படி, புளியரை வனப்பகுதி எம்.கே. பாறை பீட் வனகாப்பாளர் தங்கராஜ், வனக்காவலர் ஹரிகோபால், வேட்டை தடுப்பு காவலர் கருப்பசாமி ஆகியோர் விரைந்து வந்து அரிய வகையை சார்ந்த இரு தலை மணியன் பாம்பை கைப்பற்றி புளியரை மேற்குத்தொடர்ச்சி மலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

IMG 20190226 214949 e1551199908126 - Dhinasari Tamilசெங்கோட்டை அருகே இரு தலை மணியன் பாம்பு பிடிப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
377FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,865FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...