“சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சந்தன மகாலிங்கம் திருக்கோவில்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் போல அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டி தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து தமிழர் கட்சி சார்பில் நாளை 06.05.2019 ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்கவுள்ளது! #Save_Sathuragiri #சதுரகிரி_காப்போம்
இது குறித்து இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் அனுப்பிய மனு விவரம்!
அனுப்புனர்
… இந்து தமிழர் கட்சி
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு தலைமைச் செயலகம் கோட்டை, சென்னை _600001
பொருள்:
சித்தர்கள் அருளாட்சி செய்யும் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் சந்தனமகாலிங்கம் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிரந்தரமாக அன்னதானம் செய்ய அன்னதான கூடங்களை இந்து சமய அறநிலையத்துறை நிறுவ வேண்டி- ஏற்கனவே செயல்பட்டு வந்த அன்னதானக் கூடங்கள் ஐ மீண்டும் அரசின் அனுமதியோடு செயல்பட அனுமதிக்க வேண்டி-
மலையேறும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை “சபரிமலை ஐயப்பன் கோயில் செய்து கொடுத்திருப்பது போல சதுரகிரி மலையில் ஏற்படுத்தி தந்திட” இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை புகார் மனு.
மாண்புமிகு
தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
உலகம் முழுக்க இருக்கக்கூடிய சிவனடியார்கள் சித்தர்களின் அருள் வேண்டி யாத்திரையாக வந்து மலையேறி அருள்மிகு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் சுவாமிகளை தரிசனம் செய்து சித்தர்கள் அருள் ஆசி பெற்றுச் செல்வது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நடைமுறை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையின் மீது ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கின் காரணமாக பக்தர்கள் தினசரி மலை ஏறுவது தடைவிதிக்கப்பட்டு அமாவாசை பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களில் மட்டும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்க படுகின்றனர்.
வனத்துறையும் இந்து சமய அறநிலையத் துறையும் தேவையற்ற பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ஏற்கனவே சதுரகிரி மலையில் தரிசனத்திற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் செய்வதற்கு சில அன்னதான திருமடங்கள் செயல்பட்டு வந்தன.
“அதை பக்தர்களின் வரவை மலையின் மீது குறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஒரு தனிநபரும் அறநிலையத் துறை அதிகாரிகளும் கூட்டு சதி செய்து மலையின் மீது செயல்படக்கூடிய அன்னதான மடங்கள் சுற்றுப்புறச் சூழல் மாசு உண்டாகிறது” என்று பொருந்தாத ஒரு காரணத்தை காரணம் காட்டி மலையின் மீது பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்த அன்னதான கூடங்களை மூடிவிட்டார்கள்.
இதனால் பக்தர்கள் மிகுந்த கஷ்டத்திற்கும் அவதிக்கு ஆளாகிறார்கள்.
அன்னதானக் கூடங்கள் எல்லாம் மூடிவிட்டு மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு பச்சையப்பன் அவர்கள் மேலே அன்னதானம் செய்வதற்கு தடை இல்லை அடிவாரத்தில் சமைத்து மேலே எடுத்துச் செல்லுங்கள் என்று அதி புத்திசாலித்தனமான உத்தரவு போடுகிறார். ( அன்னதான கூடங்கள் கீழே செயல்பட வேண்டுமாம்; உண்டியல் மட்டும் மேலே இருக்குமாம். ) இது நடைமுறைக்கு சாத்தியமற்றது.
கடந்த அமாவாசை தினத்தன்று சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் சுவாமி சந்தனமகாலிங்கம் சுவாமி திருக்கோயிலுக்குச் மலை ஏறி சென்று வழிபடச் சென்ற பக்தர்கள் உணவு கிடைக்காமல் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அடிப்படை வசதிகள் குளிக்க கழிப்பிட வசதி இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இருந்தாலும் அறநிலையத் துறை அதிகாரிகளின் அன்பான அருளாசியோடு சில தனியார் உணவகங்கள் தோசை 100 ரூபாய் ஒரு இட்லி 20 ரூபாய்க்கும் என்று மகா கொள்ளை நடந்திருக்கிறது.
சதுரகிரி மலையில் தமிழக அரசு- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி பக்தர்களுக்கு சபரிமலையில் இருப்பது போன்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
- சதுரகிரி மலைக்கு தரிசனம் செய்ய செல்லக்கூடிய பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தேவையற்ற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.
-
சதுரகிரி மலையின் மீது சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களுக்கு தொடர்ந்து எல்லா பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கிட, அன்னதானம் கூடங்கள் திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
-
தனியார் அன்னதான திருமடங்கள் அரசின் அனுமதியோடு இயங்குவதற்கு தேவையான உதவிகளை செய்திட தமிழக அரசிடம் வேண்டுகிறோம்.
4.தாணிப்பாறை மலை அடிவாரத்தில் இருந்து சதுரகிரி மலை மேலே ஏறி செல்லும்போது பக்தர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வசதியும், இளைப்பாறுவதற்கு
நிழல் கூடங்களும், கழிப்பறை வசதி களையும் இடையிடையே ஏற்பாடு செய்து கொடுத்திட தமிழக அரசை வேண்டுகிறோம்.
5.சதுரகிரி மலை மலை ஏறி செல்லக்கூடிய பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்கு மருத்துவ குழுவினர்- மருத்துவ முகாம்களை அமைத்திட தேவையான நடவடிக்கைகளை செய்திட அரசை வேண்டுகிறோம்.
இதுபோன்று மேலும் தேவையான விஷயங்களை ஆய்வு செய்து சதுரகிரி மலைக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு சபரி மலை போன்ற வசதிகளை செய்து கொடுத்து விட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து நடவடிக்கை எடுத்திட இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.
இப்படிக்கு
நாள்: 06.05.2019
திங்கள் கிழமை
சென்னை




