தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே 7ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது.! இன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை என்று, அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,
ஆங்கில மாதம் 5.5.2019 ஞாயிறு அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப் படவில்லை.
ஆகையால் செவ்வாய்க்கிழமை 7.5.2019 அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப் பட்டிருக்கிறது.
ஆகையால், ஷபே கத்ர் 1.6.2019 சனிக்கிழமை மற்றும் 2.6.2019 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு நாட்களின் மத்தியிலுள்ள இரவில் ஆகும்…
- என்று முப்தி காஜி டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப், தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.





