
பர்கூா் வனப்பகுதியில் குடற்புழு நோய் தாக்கி பெண் யானை பாிதாபமாக இறந்தது.
ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் வனச்சரகர் பழனிச்சாமி வன ஊழியர் களுடன் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவா்கள் மணியாட்சி பள்ளம் என்ற இடம் அருகே சென்றபோது அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசியது.
நாற்றம் வந்த திசை அருகே வனத்துறையினர் சென்று பார்த்தபோது அங்கு ஒரு யானை செத்துக்கிடப்பது தெரிந்ய வந்தது. .இதனையடுத்து இது குறித்த தகவல்களை உடனே மாவட்ட வன அதிகாரிக்கும், சத்தி புலிகள் காப்பக கால்நடை டாக்டர் அசோகனுக்கும் தெரிவித்தனா்.
அதன் பேரில் டாக்டர் அசோகன் அங்கு சென்று, யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன்பிறகு அவர் கூறும்போது, ‘இறந்தது 20 வயதுடைய பெண் யானையாகும். இந்த யானையை குடற்புழு நோய் தாக்கியுள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக தீவனம், தண்ணீர் குடிக்க முடியாமல் யானை அவதிப்பட்டு இருக்கலாம். இந்தநிலையில் நோய் முற்றி மயங்கிவிழுந்து இறந்துள்ளது‘ என்றார்.
இதைத்தொடர்ந்து யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.
யானைகள் தண்ணீர் குடிக்கும் நீர்நிலைகள் மற்றும் இயற்கை–செயற்கை வனக்குட்டைகளில் உப்பு கரைசலை போட்டுவைத்தால், அந்த தண்ணீரை குடிக்கும் யானைகளை குடற்புழு நோய் தாக்காது
எனவே வனத்துறையினர் உடனே யானைகள் நடமாடும் இடங்களில் உப்பு கரைசல்களை போட்டு வைக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.



