December 6, 2025, 10:28 AM
26.8 C
Chennai

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.,வுக்கு 300 இடங்களில் வெற்றி வாய்ப்பு: எஸ்.வி.சேகர் ஆரூடம்!

IMG 20190513 145200 - 2025நடிகரும், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சமுதாயத்தில் இதுவரை எந்த சலுகையும் இல்லாத பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா தென்மண்டல பிராமணர் சங்க கூட்டமைப்பு (பெபாஸ்) சார்பில் திருச்சி சத்திரம் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி வளாகத்தில் வருகிற 18-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நான் மற்றும் தேவநாதன் யாதவ், டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

பொதுப்பிரிவில் வாழ்க்கை தரத்தில் நலிந்தவர்களுக்கு செய்யக்கூடிய நீதி, போராடினால்தான் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல், பல கடிதங்கள் வாயிலாக வைத்த கோரிக்கை அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

IMG 20190513 145411 - 2025நாடாளுமன்ற தேர்தலில் ஊடகங்கள் கருத்து கணிப்பு என்ற பெயரில் பொய்யான தகவலை பரப்பி வருகிறது. ஏனென்றால், ஒவ்வொரு ஊடகமும் ஒரு அரசியல் கட்சியை சார்ந்துதான் உள்ளது. மக்கள் தங்களது நிலைப்பாட்டை ஊடகத்தினரிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

எனவே, நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. தற்போதைய தேர்தலில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை அரசியல் கட்சியினர் பேசி வருகிறார்கள். சில ஊடகங்கள் மோடியை திருடன் என்று சொல்வதை நாகரிகம் போலவும், காங்கிரசை மோடி குற்றஞ்சாட்டினால் அநாகரிகம் போலவும் கருத்துகள் பரிமாறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் கட்சியை விட, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி அதிக வாக்குகளை பெறும். கிட்டத்தட்ட 6 சதவீத வாக்குகளை பெறுவார்கள். அடுத்து வர உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக கமல்ஹாசன் கட்சி இருக் கும். தமிழ்நாட்டில் 22 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க. ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதனால், பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடாது. ரஜினிகாந்த் நல்ல நண்பர். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும்போது நிச்சயம் அவரும் அரசியலுக்கு வருவார். அவரது தலைமை கூட தமிழகத்தில் வரலாம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories