ஜோலார்பேட்டை அருகே வயதான மூதாட்டியை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் பணம், 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சல் பகுதியைச் சேர்ந்த முதியவர் கண்ணன். யசோதா தம்பதியினா்.
இவர்களின் பிள்ளைகள் வேலைநிமித்தமாக வெளியுா்களில் இருந்து வருவதால் வீட்டில் இவா்கள் இருவா் மட்டுமே தனியாக இருந்துள்ளனர். வயதான தம்பதியினா் தனியாக இருப்பதை நோட்டமிட்ட திருடா்கள் சம்பவத்தன்று
இளம்பெண்ணும் ஒரு ஆணும் தம்பதியனா் போல கண்ணனின் வீட்டுக்கு வந்தனா். இருவரும் கண்ணனின் உறவினா்கள் போல பேசி உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்தனா்.
மேலும் அவா்கள் கண்ணனுக்கு பழம், பிஸ்கட் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனா். இருவரையும் நம்பிய யசோதா நான் குளிக்க செல்கிறேன் எனக் கூறிவிட்டு குளியலறைக்கு சென்று விட்டார்.
இதற்காக காத்திருந்த ஜோடிகள் இருவரும் பீரோவில் முதியவர் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணமும், அவருடைய மருமகளுக்கு சொந்தமான 10 சவரன் தங்க நகையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதனிடையே குளித்து விட்டு வெளியே வந்த யசோதா பீரோ திறந்திருப்பதையும் அதில் வைத்திருந்த ரொக்க பணமும், நகையும் காணதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து இது குறித்து ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஆனால் புகார் கொடுத்து ஒரு மாதங்கள் ஆனநிலையில்
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என குற்றம் சாட்டினார்.
மேலும் கடந்த ஒரு மாதத்தில் இது ஐந்தாவது திருட்டு இது எனவும், போலீஸாரின் மெத்தனப் போக்கே இந்த திருட்டு சம்பவத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. ஆகவே இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் திருட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



