நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என்று காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா, சாதாரண மக்கள் காணாமல் போனதாக புகார் வந்தால் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? என்று உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டத்தில் மாயமான 19 வயது இளம்பெணை மீட்கக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுபியது.
மேலும், புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து வரும் திங்கட்கிழமைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.




