
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை பொதுமக்கள் தனக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ட்வீட் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடா்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘குடிநீர் பஞ்சம் தொடங்கி வேலைஇல்லாத திண்டாட்டம் வரை தமிழகத்தில் நிலவும் ஒவ்வொரு பேரவலமும் வரும் சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை திமுக உறுதி செய்யும்.
உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகள் என நீங்கள் கருதவதை voiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.#voiceofTN என்ற ஹேஷ்டேக் இதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் ஜூன் 28முதல் ஜூலை 31 வரை நடைபெறும் என்று சபாநாயகா் தனபால் இன்று (திங்கள் கிழமை) காலை அறிவித்தார்.
விடுமுறை நாட்களைத் தவிர்த்து 23 நாட்கள் கூட்டத்தொடா் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் குடிநீா் பிரச்சினை பெரிய அளவில் விவாதிக்கப்படக் கூடும் என எதிபார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை பொதுமக்கள் தனக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தள்ளார்.
குடிநீா் தட்டுபாட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனா்.
சென்னையில் இன்று (திங்கள் கிழமை) திமுக தலைவா் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி கோரி மாநிலங்களவையில் திமுக எம்.பி. டிஆர்.பாலு நோட்டிஸ் கொடுத்திருந்தார். என்பது குறிப்பிட்டதக்கது.



