மக்கள் அதிர்ச்சி! பண்டிகை நேரத்தில் தங்கத்தின் விலை?

சென்னை லைஃப் ஸ்டைல் வணிகம்
gold rate - 2026

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்து ரூ.29,120க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.3,640 க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.49.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.

கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது.

gold lady - 2026

செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை சரிந்து வருகிறது.

gold jewellery gold chain - 2026

இதன் எதிரொலியாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்து ரூ.29,120க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.3,640க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.49,10க்கும், கிலோ ரூ.49,100க்கும் விற்பனையாகி வந்தது .

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.