நடிகரும் பாஜக., பிரமுகருமான எஸ்.வி.சேகர் முகநூலில் ஒரு பதிவை பார்வர்ட் செய்து, அதை தவறு எனத் தெரிந்ததும் நீக்கி விட்டார். பின்னரும் ஊடகத்தினர் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவே, அவர் பகிரங்க மன்னிப்பு கோரி, தனது தவறைச் சொல்லி அதற்கான வருத்தமும் தெரிவித்துவிட்டார்.
அவர் மன்னிப்பு கோரி கடிதம் வெளியிட்ட பின்பும், அவர் வீட்டின் முன் கூடி, கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது போல், கல்லெறிந்து வன்முறையில் இறங்கினர் ஊடகத்தினர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் கோபமான பதிவுகள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. அவற்றில் ஒரு பதிவு இது…
பத்திரிக்கைக்காரர்களே…உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா?
என்னங்கடா பத்திரிக்கை, டிவிக்காரனுக பெரிய யோக்கியனுக மாதிரி குதிக்கிறீர்கள்?
பெருமாள் முருகன் என்கிற சைக்கோ ஒருத்தன் வெளிநாட்டில காசு வாங்கிட்டு பெண்களை மிகக் கேவலமாக “செக்ஸ் புத்தகம்” ஒன்றை எழுதிய போது… உங்க டிவி, பத்திரிக்கைக் காரனுக எல்லாம் விடிய விடிய அவனுக்கு விளக்கு புடுச்சு விவாதம் நடத்துநீர்களே….
அய்யோ… கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து… புத்தகத்தை வாசிக்கத் தெரியாதவர்கள், குறுகிய மனப்பான்மை உடையவர்கள், பிற்போக்குவாதிகள் என விவாதம் நடத்தியவர்கள் தானே தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகை, டிவிக்காரனுகளும்?
சென்னை உயர்நீதிமன்றம் புத்தகம் பிடித்தால் படியுங்கள்… பிடிக்கவில்லை என்றால் படிக்காதீர்கள் என்று சொன்ன போது, கருத்து சுதந்திரம் காப்பாற்றப்பட்டுவிட்டது என கொண்டாடியவார்கள் தானே பத்திரிக்கையாளர்கள் ?
பெண் டிவி ரிப்போர்ட்டர்கள் எல்லாம் —பச்சாரிகள் என்று ஒருவர் facebook ல் பதிவிட அதை இன்னொருவர் forward செய்துவிட்டாராம். எல்லா டிவி ரிப்போர்ட்டர்களும் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கிறார்கள்.
கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. உங்களுக்கு பிடித்தால் அந்த facebook பதிவை படியுங்கள். பிடிக்கவில்லை என்றால் அதை படிக்காதீர்கள்- சென்னை உயர்நீதிமன்றமே தீர்ப்பு சொல்லியிருக்கிறது.
முதலில் தமிழகத்தில் எல்லா டிவி ரிப்போர்ட்டர்களும் திருச்செங்கோடு வந்து மாதொருபாகன் விவகாரத்தில் நாங்கள் நடந்துகொண்டது தவறு என்று இங்குள்ள பெண்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கள்.
பிறகு மற்றவர்களை மன்னிப்பு கேட்க சொல்லி போராடுங்கள்