அசுரன் படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கலைப்புலி’ எஸ்.தாணுவின் ‘வி.கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க,தனுஷ், மஞ்சு வாரியர் நடித்து வெற்றிமாறன் இயக்குகிறார்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் யுகபாரதி எழுதிய ‘பொல்லாத பூமி…’ என்று துவங்கும் ஒரு ‘பெப்பி’ பாடலை தனுஷ், டீஜே, கென் கருணாஸ் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
‘வட சென்னை’ படத்தை தொடர்ந்து வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து உருவாக்கி வரும் படம் ‘அசுரன்’ . ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திரைக்கதையில் அடிக்கடி நிறைய மாற்றங்களை செய்து வருகிறாராம் வெற்றி மாறன். அதற்கு இப்படத்தின் மீது மக்கள் காட்டும் மிகுந்த எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்.
எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலின் திரைவடிவம் இப்படம் வெக்கை நாவலில் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. அசுரன் படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகத்தான் செய்திகள் வந்தன.
வெற்றிமாறன் செய்த தற்ப்போதைய மாற்றத்தின்படி மகன் கதாபாத்திரத்தை படத்திலிருந்து எடுத்து விட்டார். அத்தகவலின்படி அசுரன் படத்தில் தனுஷ் ஏற்றிருப்பது ஒரு வேடம்தான். ஆனால் 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



