சென்னை

காவிரி பெயரில் தமிழகம் இழந்தவை: இன்றைய போராட்ட சேதங்கள்!

தமிழகத்தில் இன்று நடைபெற்ற போராட்டங்களில் 10 ஆயிரம் பெண்கள் உட்பட 85 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை செய்யப் பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தாம்பரம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06027) வருகிற 9ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை வாரம் தோறும் திங்கட் கிழமை மற்றும் புதன் கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து மாலை 5.30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30க்கு கொல்லத்தை சென்றடையும்.

அண்ணா பல்கலை துணை வேந்தராக சூரப்பா நியமனம்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி, 2016 மே முதல் காலியாக உள்ளது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, மூன்று முறை தேடல் குழுக்கள் அமைக்கப் பட்டு, துணைவேந்தர் தேர்வுப் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், சூரப்பாவை தேர்வு செய்து இன்று நியமனம் செய்து உத்தரவிட்டார் ஆளுநர்.

தன்னந்தனியே சாலைமறியல்! திமுக கொடியேந்தி தில்லு காட்டிய பெண்!

பல இடங்களில் கல்வீச்சு, பஸ் மறியல் என வன்முறைகளும் அரங்கேறின. சில இடங்களில் கைது செய்யப் பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். சில இடங்களில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, சாலை யோரம் நிற்க வைத்தனர். 

உரிமைப் போராட்டம் வன்முறையாக மாற வாய்ப்பு உண்டு: கமல்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி உரிமைப் போராட்டம் வன்முறையாக மாறிவிடக் கூடாது. ஆனால், போராட்டத்தை அடக்க முயன்றால், அது வன்முறையாக மாற வாய்ப்புண்டு” என்று குறிப்பிட்டார்.

கல்வீச்சில் படுகாயம் அடைந்த சென்னை கூடுதல் துணை ஆணையர்!

சென்னை கூடுதல் துணை ஆணையராகப் பணி புரியும் ஆர்.குமார், சிறந்த பணி செய்தமைக்கான அண்மையில் குடியரசூத் தலைவர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.  
- 2026

கைதான நிலையிலும் கல்யாணத்தை நடத்தி வைத்த திராவிட இயக்க புரோகிதர்

இந்நிலையில், மண்டபத்தில் சிறைவைக்கப் பட்ட நிலையிலும், அங்கே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாரதிதாசன் மற்றும் ஸ்ரீமதி இணைக்கு திருமணம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

வெற்றி வெற்றி! 100 சதவீதம் வெற்றி! போராட்டம் குறித்து ஸ்டாலின் திருப்தி!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று தமிழகம் தழுவிய அளவில் திமுக., சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் கல்வீச்சு, தர்னா, பஸ்மறியல், ரயில் மறியல் என போராட்டங்கள் வன்முறையின் திசையில் சென்றன. 

காவிரிக்காக போராட்டம்: கலவரக் காடான தமிழகம்!

திமுக.,வின் சார்பில் திடீரென போராட்டங்களில் தலை காட்டியுள்ளார், ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டிருக்கிறார்.

கமல் ஒரு அரசியல் அப்ரன்டீஸ்… கலாய்க்கும் ஜெயக்குமார்!

மேலும், ''அரசியல் அப்ரண்டிஸ்" கமலஹாசன். அவர் ஒரு ரிட்டையர்டு நடிகர் என்று கமல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

பாலுக்கும் தோழன்; பூனைக்கும் காவல்!: பழமொழியை சரியாகச் சொல்லி துரை.முருகன் மறைமுக கிண்டல்!

நல்லவேளை பழமொழியை சரியாச் சொல்லி, மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கிட்ட இருந்து தப்பிச்சோம்டா சாமி என்று ஒரு பெருமூச்சு விட்டிருப்பார் துரை.முருகன்! 

சென்னையில் பயங்கரம்: கெஞ்சியும் வராத மனைவியை 11வது மாடியில் இருந்து தள்ளிக் கொன்றவன் கைது!

அக்கா சுகுணாவுடன் கோபத்துடன் பேசிக் கொண்டிருந்த ராஜ்கண்ணு, ஜெயசுதாவை என்னுடன் வந்து வாழச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அக்கா சுகுணா, நீங்களே ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு, தன் மகன் கார்த்திக்குடன் நடு ஹாலுக்கு வந்துவிட்டாராம்.
- 2026

Recent articles