சென்னை

மெரினாவில் பேரணி! தர்ணா நடத்திய ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது!

அவர்களை அங்கு செல்லக் கூடாது என்று போலீஸார் தடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உழைப்பாளர் சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் உரிய விளக்கம் அளித்தோம்: முதல்வர் எடப்பாடி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் காவிரிப் பிரச்னை உள்ளிட்ட போராட்டங்கள் குறித்த நிலவரங்களை கேட்டறியவே ஆளுநர் எங்களை அழைத்தார். தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கமளித்தோம். .

பிரபாகரன் உயிருடன் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கிறார் சீமான்; ஆனால் உண்மை என்னவென்று அவருக்குத் தெரியாது…!

இப்போதும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார், மறைந்திருக்கிறார் என்றெல்லாம் பேசிவருகிறார் வைகோ. உண்மை தனக்குத் தெரியும் என்று முழங்கி வரும் வைகோ, இந்த முறை, சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாகப் பேசியிருக்கிறார்.

காவிரிக்காக ஐபிஎல்.,லைப் புறக்கணிக்க கிளம்பும் குரல்கள்!

இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிட வேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை.இது தமிழர்களின் பிரச்னை என்று தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் பாஜக., பிரமுகரை வெட்டிய கும்பல்: பயங்கரவாத அதிர்ச்சி பின்னணி!

ராமநாதபுரத்தில் கடந்த வாரம் பாஜக., பிரமுகரை வெட்டிய 3 பேர் கொண்ட கும்பல் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்-அப்’ மூலம் இயங்கிய பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கீழக்கரையில் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மதுரை சந்தையூர் கிராம சாதிப் பிரச்னை; தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவரிடம் மனு!

 தமிழகத்தின் மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள சந்தையூர் கிராமத்தில், பறையர் -அருந்ததியினர் இடையே நிலவி வரும் தீண்டாமை பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப் பட வேண்டும் என்றும், அங்கே தாழ்த்தப் பட்டோரை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யும் நிகழ்வைத் தடுக்கக் கோரியும்,  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ராமாசங்கர் கட்டேரியாவை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. 
- 2026

அன்று மட்டும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக., வெளியேறியிருந்தால்…? : முதல்வர் எடப்பாடியின் கேள்வி!

ஆனால் திமுக., காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது. அதன் மூலம், விவசாயிகளுக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்தது திமுக., என்று குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி. 

சட்டையைப் பிடித்த இளைஞரின் கையை முறிக்கும் போலீஸ்; சென்னையில் கொடூரம்

இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் மற்றும், இரு உதவி ஆய்வாளர்கள் என மூவரும் சேர்ந்து பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர்.

காவிரிக்காக அதிமுக., வினர் நடத்திய ‘உண்ணும்’விரதம்

உண்ணாவிரப் போராட்டத்தில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி, ஆட்டம் கூத்து என்று கட்சி விழா மேடை போல, எதற்கும் பஞ்சமில்லாமல் போனதால் தொண்டர்கள் உற்சாகமாகக் காணப்படுகின்றனர். உணர்ச்சி மிக்க போராட்டம் ஜாலியான போராட்டமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மோடி அரசுக்கு எதிராக எடப்பாடி- ஓபிஎஸ் கூட்டணி அரசு உண்ணாவிரதம்!

அதன்படி, அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றார்.

பதற்றம் கூட்டிய காவிரி: தில்லி விரைகிறார் ஆளுநர்

தினங்களுக்கு முன்னர் அரசு தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் மோடிக்கு கிரண் பேடி கடிதம்

குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கும் போது கிரண் பேடி சரியான வழி காட்டியுள்ளார்.
- 2026

Recent articles