
மேலூர் : மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த பதினெட்டாங்குடி பகுதியில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த இருவரை , மேலூர் 108 ஆம்புலன்ஸ் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு ஏற்றி வந்தது.
அப்போது , கருத்தபுளியம்பட்டி பேருந்து நிலையம் அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்த நேரத்தில், விபத்தில் காயம் அடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க வந்திருந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் விமல் என்பவரை மது போதையில் இருந்த நபர் கத்திரிக்கோலால் உடலில் 5 க்கு மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் மீட்டு, மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவல் அறிந்த, மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 மருத்துவ ஊழியரை கத்திரிக்கோலால் குத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.