கருப்பாநதி மலை வாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடினார், தென்காசி எஸ்.பி.கிருஷ்ணராஜ்.
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைமான் நகரில் வாழும் மலைவாழ் மக்களுடன நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல்துறை, வனத்துறை மற்றும் வன உயிர் இயற்கை பாதுகாப்பு அமைப்பு இணைந்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அங்கு வசிக்கும் மலைவாழ் குடும்பங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறி அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மலைவாழ் மக்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிய விருந்தில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் காவல் துறையினர் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்களுடன் தீபாவளி பண்டிகையை கலந்து கொண்டு கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.