புரோட்டா கடைகளில் பெருகி வரும் பிளாஸ்டிக் பயன்பாடு

12 June30 plastic ban

தென்காசி மேலகரம் இலஞ்சி பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் ஹோட்டல் கள் புரோட்டா கடைகளில் உணவுப் பொருள்கள் அனைத்துமே பிளாஸ்டிக் பைகளில் வழங்கப் படுகின்றன.

நெல்லை மாவட்டம் தென்காசி மேலகரம் இலஞ்சி பிரானூர் பார்டர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் பலசரக்கு கடைகள் டீ கடைகள் புரோட்டா கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் உபயோகம் அதிகமாகவே இருக்கிறது …

பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல் படுத்தப்பட்ட ஜனவரி மாதம் மட்டுமே அதிக அளவில் கெடுபிடி இருந்தது. ஆனால் தொடர்ந்த நாட்களில் சாம்பார் கவர் மக்களிடையே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில கடைகள், அரசு அலுவலகங்களில் மட்டுமே பிளாஸ்டிக் தடை உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் தடை உத்தரவை அனைவரும் முறையாக பின்பற்றி இருந்தால் தினந்தோறும் வீட்டுக்கு வரும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மக்காத குப்பை என பிரிக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது.

வாடிக்கையாளர்களிடம் பாத்திரங்கள் கொண்டு வரச் சொன்னால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று கருதி பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருள்களில் கொடுத்து விடுகின்றனர்

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நோக்கில் கடைகளில் சென்று ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் மீண்டும் தலைதூக்கும் அதை தடுக்கவே முடியாது என்று பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமலும் செல்கின்றார்களோ என்ற ஐயம் பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

 

Advertisements

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.