பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட #பெண் ஒலிப் பதிவு மூலம்
பேட்டி அளித்துள்ளார்.
இதில், எங்களை சீரழித்த கயவர்களை விட சமூக வலைத்தளங்களில் பொய்யான கற்பனைகளை எழுதியும், அரசியல் ரீதியாக வதந்திகளைப் பரப்புகிறவர்களும் எங்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவு மன உளைச்சலிலும் வேதனையிலும் தள்ளுகிறார்கள்! என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னைக் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள் என துணை சபாநாயகர்
பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கவில்லை. அவர்களை தண்டிக்கவே விரும்புகிறது.

இக்கொடூர சம்பவத்தில் யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்கு நானும், என் குடும்பமும் தயாராக உள்ளோம். என் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது. இது தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார் அவர்.





