திமுக.,வுக்கு தேர்தல் பணி செய்யும் ஜாக்டோ ஜியோ கொடியை அரசு அலுவலகங்களில் அகற்ற வேண்டும்!

Reporters Diary புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

jacto geo - 2026

கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி தொகுதி விளாத்திகுளம் பகுதியில் நான் நேரடியாக பார்த்தேன். தொகுதி தேர்தல் பணியாளர்கள் (அரசு ஊழியர்கள் ) கனிமொழிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

கண்கூடாக தெரிகிறது! பா.ஜ.க ஆதரவாளர்களை அனுமதி பெற கூட அலைகழிக்கின்றனர்.  ஆனால் திமுகவினர் சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் தினமும் கிடா விருந்து நடக்கிறது. ஆரத்திக்கு 2000/- பணம் கொடுக்கப்படுகிறது. கண்டுகொள்ளவில்லை . பல இடங்களில் இது நடைபெறுவதாக கூறப்படுகிறது

தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சி இல்லாத இந்துமுன்னணி கொடியை அகற்றுகின்றனர்.  ஆனால் தேர்தல் அதிகாரி அலுவலக வாசலில் ஜாக்டோ ஜியோ ஆதரவு சங்க கொடி அகற்றப்படவில்லையே

ஜாக்டோ ஜியோ இந்த தேர்தலில் திமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித் துள்ளது நினைவிருக்கட்டும்! இவர்கள் தங்கள் சம்பள உயர்வு, ஓய்வூதியம் பிரச்சனையில் அரசின் மீது அதிமுக கூட்டணி கட்சிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்

இவர்கள் தான் ஓட்டுசாவடியிலும் எண்ணிக்கை மையத்திலும் அதிகாரிகளாக இருக்க போகிறார்கள்! அரசியல் கட்சி அல்லாத அமைப்புகளின் கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிக்கும் கெடுபிடி விதித்து தடுத்து நிறுத்தும் தேர்தல் ஆணையம் அரசியல் தேர்தல் சார்புடைய ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களை வைத்து தேர்தல் நடத்தினால் அது நடுநிலையாக இருக்குமா ?

ஓட்டுச் சாவாடியிலும் எண்ணிக்கை மையத்திலும் நாங்கள் தான் ராஜா என எனக்கு தெரிந்த சில ஜாக்டோ ஜியோ ஆதரவாளர்கள் மார் தட்டுகின்றனர்!  தேர்தல் ஆணையம் சிந்திக்குமா ?

கா.குற்றாலநாதன், நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.