Home Blog Page 107

சீனாவுக்கு அல்ல, அமெரிக்கா ரஷ்யாவுக்கு இணையாகப் பேச வைத்த ‘சம்பவம்’!

brahmos missile - 2026

குப்பையாகும் ஆயுதங்களால் கை நழுவும் வல்லரசுகளின் ஆதிக்கம்!

  • முரு தெய்வசிகாமணி

சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபிலிம் கேமிராவும், PCO, Browsing Centre என்பது போன்றவை கோலோச்சும் பிஸினஸாக இருந்தது. இன்று அந்தத் தொழிலை மட்டுமே நம்பி இருந்ததால் அவரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிட்டதல்லவா? அதுபோல பாதுகாப்பு விஷயத்தில் மிகப்பெரிய சக்ர வியூகமாக நினைத்துக் கொண்டிருந்த டெக்னிக்குகள் ஒரே ஒரு போரில் காயலாங்கடை மேட்டராகிவிடும்.

இவை அவ்வப்போது பெரிய போர் வரும்போதுதான் தெரியும் என்றாலும், போரில் மோதுகிற நாடுகள் ஓரளவிற்காவது சம பலத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அது போன்ற விஷயங்கள் வெளிவரும்.
ஆர்மீனியா, அஜர்பைஜான் போர் என்பது முதன்முதலில் ட்ரோன்களை வைத்து ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க காரணமாக இருந்தது. அது உக்ரைன் மற்றும் காஸாவில் இஸ்ரேலுடன் நடந்த போரில் முக்கியமாக கவனிக்கப்பட்டது.

அதன் விளைவாக ட்ரோன்கள் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்தது. துருக்கிக்கு கோடிக்கணக்கான ஆர்டர்கள் குவிந்தது. அதன் விளைவாக துருக்கி தன்னை ஒரு மிகப்பெரிய சக்தியாக நினைத்து, அதன் மூலம் இஸ்லாமிய நாடுகளின் தலைவராக ஆகலாம் என கனவு கண்டது.

அதன் விளைவாக கடனில் மூழ்கிக்கொண்டு இருக்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களைக் கொடுத்தது. அதன்படி, பாகிஸ்தானின் தாக்குதல் இந்தியாவிற்கு எதிராக பெரிய வெற்றிபெறும், அதன் மூலம் அதன் ட்ரோன் ராஜ்ஜியத்திற்கு பெற விளம்பரம் கிடைக்கும் என்று நம்பியது. ஆனால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அதை அர்த்தம் அற்றதாக்கிவிட்டது.

அதன் விளைவாக துருக்கியின் கோடிக்கணக்கான ட்ரோன் ஆர்டர்கள் கேன்சலாவதாக வரும் செய்திகள், ஏற்கனவே பொருளாதார நசிவில் இருக்கும் துருக்கிக்கு வருக்கி வாங்க காசில்லாத சூழலை நோக்கிச் செல்ல வைத்திருக்கிறது.

அதுபோல அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்று பல நாடுகள் ஸ்டெல்த் வகை விமானங்களுக்கு மில்லியன் கணக்கில் $ கொட்டி செலவு செய்து ஆராய்ச்சியில் ஐந்தாம் தலைமுறை விமானத்தை கண்டுபிடித்தது. ஆனால் இந்தியா அந்த பக்கம் போகவில்லை. அதற்கு காரணம் அதன் தேவையை நாம் ஏவுகணைகளை வைத்து செய்துகொள்ள முடியும் என்று எடுத்த முடிவு.

ஆபரேஷன் சிந்தூரில் ஒரு விமானம் கூட பாகிஸ்தான் எல்லையை கடக்கவில்லை, ஆனால் பாகிஸ்தானின் 11 முக்கிய ஏர்பேஸ்களில் 9 நாசப்படுத்தி சுடுகாடாக்கிவிட்டது. அதை சரி செய்ய வேண்டுமெனில் 100 பில்லியன் டாலர்கள் வேண்டும் என்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் மீண்டும் பழைய டெக்னாலஜிக்கு போக முடியாது, புதியதாக வாங்க வேண்டிவரும் என்பதால்.

ஆனால், இந்தியா புத்திசாலித்தனமாக ஐந்தாம் தலைமுறையை விட்டுவிட்டு, ஆறாம் தலைமுறை டெக்னாலஜியான நெட்வவொர்க் சென்ட்ரிக் நுட்பங்களை பயன்படுத்தியது. உதாரணமாக நமது ஆகாஷ்தீர் 64 வான் இலக்குகளை கண்டுபிடித்து அதில் 16 இலக்குகளை ட்ராக் செய்து, நான்கு இலக்குகளை சுட்டு வீழ்த்த முடியும்.

ஆகாஷின் இலக்கில் ட்ரோன் வார்ம்ஸ் அல்லது மஸ்ரூம் என்று நூற்றுக்கண்க்கில் வரும்போது ஒரு ஆகாஷ்தீரால் அதை சுட்டு விழ்த்த முடியாது. அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஆகாஷ்தீர்கள் அதை தடுக்க எங்கேஜ் ஆகியிருக்கும். ஆனால் இரண்டும் தனித்தனியாக வேலை செய்தால் ஒரே ட்ரோன் அல்லது மிஸைலை தடுக்க ஒன்றுக்கு மேற்பட்ட ராக்கெட்டுகளை நாம் ஏவி அதில் ராக்கெட்டுகளை வீணடிக்க வாய்ப்புண்டு.

அப்படி எதிர்பார்த்துதான் பாகிஸ்தான் நூற்றுக்கணக்கில் ட்ரோன்களையும், அதனுடன் மிஸைல்களையும் ஏவியது. ஆனால் நமது ஆகாஷ் சிஸ்டம் அதற்குள் இருக்கும் ஆறாம் தலைமுறை நெட்வொர்க் மூலம் தொடர்பை ஏற்படுத்தி எனக்கு கொருக்குபேட்டை, உனக்கு சைதாப்பேட்டை என்று பிரித்துக்கொண்டு வேலை செயததால் மிகச்சிறப்பாக தாக்குதலை தடுக்க முடிந்தது.

அதிலும் குப்பைகளையும், உண்மையான ஆயுதங்களையும் இனம் பிரிக்கும் அளவிற்கு அதன் தொழில் நுட்பம் சிறப்பாக இருந்ததால், சில வாரங்களாவது போர் நீடிக்கும் என்ற சீனாவின் எதிர்பார்ப்பு சில மணி நேரங்களில் பொய்த்துப்போனது மட்டுமல்ல துருக்கியின் சாம்ராஜ்யம் வழக்கம்போல தவறான முடிவால் மீண்டும் வீழ்ந்தது.

அப்படியென்றால் அமெரிக்கா கோடிக்கணக்கில் கொட்டி தயாரித்த ஐந்தாம் தலைமுறை விமானங்கள் குப்பையா கோப்பால்…?

அப்படித்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் அதை எப்படி வேறு வகைகளில் பயன்படுத்துகிறோம் என்பதில் அதற்கான பதில் அடங்கி இருக்கிறது
இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் மிஸைல்கள். அதன் அக்யூரசி இன்று உலகம் முழுவதில் உள்ள ஆராய்ச்சி கூடங்களில் விவாதிக்கப்படுகிறது.

அப்படியென்றால் நமக்கு விமானப்படையே தேவையில்லையே? எதற்காக நாம் ரஃபேலை அவ்வளவு விலை கொடுத்து வாங்கினோம்?

அப்படியில்லை, அதன் ரோல்கள் மாறுகிறது. அது முன்பு போல எதிரியின் எல்லைக்குள் புகுந்து ரிஸ்க் எடுத்து தாக்க வேண்டியதில்லை, மாறாக வானில் வட்டமிட்டு எதிரியின் விமானம் நம்மை தாக்கும் எல்லைக்குள் வந்துவிடாமல் பார்க்கிறது. அது மட்டுமல்ல, நமது ஏவுகணைகளை நிலத்தில் இருந்து வீசுவதை விட வானில் இருந்து பறந்துபோய் வீசினால் அதன் வேகமும், இலக்கும் துல்லியமாகவும் எளிதாகவும் அமைகிறது.

நாம் FoxBat என்ற ரஷ்யாவின் மிக் ரக விமானத்தை அன்று பெருமளவில் பயன்படுத்தினோம். ஆனால் ரஷ்யா அதை 25 ஆண்டுகளுக்கு முன்பே அதை வீசிவிட்டது. ஏன்னெறால் அதன் சேட்டிலைட்கள் அதன் வேலையை செய்துவிட்டது.

அதுபோன்ற நடைமுறை அனுபவம்தான் இந்தியாவின் மிகப்பெரிய பலம், அது இல்லாததால் சீனா டிரில்லியனில் கொட்டி செய்த அதன் ஹைடெக் விமானங்களும், வான் பாதுகாப்பும் காயலான்கடைக்கு கல்லாக்கட்ட உதவும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.

இது ஒன்றும் ஏர்ஃபோர்ஸுக்கு மட்டுமல்ல, கடற்படையின் நிலை இன்னும் மோசம். ஆம், அமெரிக்காவின் மிக நவீனமான USS Herald முதல் பல விமானந்தாங்கி கப்பல்கள் நமது பிரம்மோஸின் தாக்குதலுக்கு தப்பிக்க முடியாது என்றாகிவிட்டது.

அப்படியென்றால் 1971-ல் அமெரிக்காவும், இங்கிலாந்தும் நம்மைச் சுற்றி வளைத்ததுபோல இன்று செய்தால், நம்மை காக்க ரஷ்யா வரவேண்டியதில்லை, நமது பிரம்மோஸில் அவர்களுக்கு ஜலசமாதியை நம்மால் கொடுக்க முடியும்! அதுமட்டுமல்ல, அன்றே நம் நண்பன் ரஷ்யா அவர்களை விரட்டியது நீர்மூழ்கி கப்பல்களால்தான். இன்று நம்மிடம் நமது கடல் எல்லையை காக்க போதுமானது உள்ளது.

அப்படியெனில் அமெரிக்காவிடமும், சீனாவிடமும் இருக்கும் அந்த கப்பல்கள் அர்த்தமற்றதாகிப்போக ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் ரஷ்யா பெரிய விமானந்தாங்கி கப்பலை கட்டவில்லை. அப்படியானால் நாம் எதற்காக கட்டுகிறோம்?

அந்தக் கப்பல்கள் சாதாரண காலங்களில் எல்லையை பாதுகாக்கத் தேவை. அதுமட்டுமல்ல, அதில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பம், நமது கப்பல் கட்டும் திறனை உயர்த்த அவை மிக மிக அவசியம்.

மேலும், அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் நாடுகளைப் பிடித்து, அதன் எல்லையை நேரடியகவோ, மறைமுகமாகவோ விரிவாக்க வேண்டும் என்பது அதன் விருப்பம். ஆனால், நமக்கு அந்த எண்ணமும் இல்லை, தேவையுமில்லை!!

ஆனாலும் அமெரிக்காவும், சீனாவும் அதை சைகாலாஜிகல் வாருக்காக பயன்படுத்தும்போது, நாமும் நமது எல்லையை பாதுகாக்க எங்களிடமும் இருக்கிறது என்று பதில் சொல்லத் தேவை உண்டல்லவா?!

எனவே, ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு மட்டும் வாக்கரிசி போடவில்லை, அமெரிக்கா, சீனா, துருக்கி மட்டுமல்ல அரதப்பழசான பல டெக்னிக்குகளுக்கும் வாக்கரிசி போட்டிருக்கிறது என்பதால்தான் உலகெங்கும் இந்தியாவின் போர் யுக்திகள் விவாதிக்கப்படுகிறது!

காஷ்மீரில் கைவெச்சுப்பார் என்று கத்தினார்கள், சத்தமில்லாமல் அவர்கள் குரல்வளையில் காலே வைத்துவிட்டோம். அப்படியா PoK மீது கைவெச்சுப்பார் என்றார்கள், அங்குமட்டுமல்ல பாகிஸ்தான் முழுவதும் கரகாட்டம் ஆடி முடித்துள்ளோம்!

நாம் என்னதான் நமது ராணுவ, பொருளாதார பலத்தை எடைபோட்டு, ஜோதிடத்தை ஆராய்ந்து, ஆரூடங்களை கணக்கில் காட்டி வருங்காலம் இந்தியாவுடையது என்று சொன்னாலும் அதில் நடக்குமா என்ற ஏக்கம் நம்மை அறியாமல் சந்தேகத்தோடு ஒட்டிக்கொண்டு இருந்தது. அது இன்று விலகியது, புதிய நம்பிக்கை மலர்ந்தது.

நேற்றுவரை நாம் சீனாவுக்கு இணையாக இருப்பதாக நம்மை மதிப்பிட்டு கொண்டிருந்தோம். ஆனால் இன்று நம்மை அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இணையாக பேசுகிறார்கள் என்பதை நான் அதற்கு மேலாக இருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். அதை உலகம் விரைவில் உணரும்!

IPL 2025: கடைசி இடத்தில் நீடிக்கும் சிஎஸ்கே!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ராஜஸ்தான் – டெல்லி – 20.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (187/8, ஆஅயுஷ் மஹத்ரே 43, டிவால்ட் பிருவிஸ் 42, ஷிவம் துபே 39, தோனி 16, யுத்வீர் சிங் 3/47, ஆகாஷ் மத்வால் 3/29, துஷார் தேஷ்பாண்டே, வனிந்து ஹசரங்கா தலா ஒரு விக்கட்), ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி (17.1 ஓவர்களில் 188/4, வைபவ் சூர்யவன்ஷி 57, சஞ்சு சாம்சன் 41, ஜெய்ஸ்வால் 36, துருவ் ஜுரல் ஆட்டமிழக்காமல் 31, ஷிம்ரோன் ஹெட்மயர் ஆட்டமிழக்கமல் 12, அஷ்வின் 2/41, அன்சுல் காம்போஜ் 1/21, நூர் அகமது 1/42) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆயுஷ் மஹத்ரே (20 பந்துகளில் 43 ரன், 8 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் டேவன் கான்வே (8 பந்துகளில் 10 ரன், 2 ஃபோர்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய உர்வில் படேல் (பூஜ்யம் ரன்) இந்த ஆட்டத்திலும் சரியாக ஆடவில்லை.

அவருக்குப் பின் ஆட வந்த அஷ்வின் (8 பந்துகளில் 13 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) சுமாராக ஆடினார். அவர் ஏன் இவ்வளவு முன்னதாகக் களமிறக்கப்பட்டார் என்பது புரியாத புதிராக இருந்தது.  அவருக்குப் பின்னர் வந்த ரவீந்தர் ஜதேஜா (1 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை. ஆனால் டிவால்ட் ப்ருயிஸ் (25 பந்துகளில் 42 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.

பின்னர் ஆட வந்த ஷிவம் துபே (32 பந்துகளில் 39 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), எம்.எஸ். தோனி (17 பந்துகளில் 16 ரன், 1 சிக்சர்)ஆகியோர் வேகமாக ரன் அடிக்க முடியவில்லை அதனால சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 187 ரன் எடுத்த்து.

          188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்கவீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (19 பந்துகளில் 36 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (33 பந்துகளில் 57 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (31 பந்துகளில் 41 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), அவருக்குப் பின் வந்த  ரியன் பராக் (3 ரன்), துருவ் ஜுரல் (12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் (5 பந்துகளில் 12 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் அதிரடியாக ஆடினர். இறுதியில் ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 188 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் ராஜஸ்தான் அணி புள்ளைப்பட்டியலில் ஏழாவது இடத்தையும் சன்ரைசர்ஸ் அணி எட்டாவது இடத்தையும் பெற்றுள்ளன். நாளை மிக முக்கியமான மும்பை டெல்லி ஆட்டம் நடைபெறவுள்ளது.

செங்கோட்டை நித்ய கல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்!

thiruvasagam mutrothal in sengottai - 2026

செங்கோட்டை ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிலவேம்பு கஷாயம் வழங்கல் நடைபெற்றது.

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு நித்யகல்யாணி அம்மன் கோவில் முன்பு வைத்து செங்கோட்டை சாய் சித்த மருத்துமனை சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழச்சிக்கு பணிநிறைவு பெற்ற சித்த மருத்துவரும் சாய் சித்தமருத்துமனை நிறுவனருமான சித்தமருத்துவா் டாக்டர் கலா தலைமைதாங்கினார். கல்யாணி ஆடிட்டர்சங்கர், தங்கையா நகர்மன்ற உறுப்பினா் சரஸ்வதி ராஜகோபால், கோபாலகிருஷ்ணன்,  ஆகியோர் முன்னிலைவகித்தார் சமுதாய செயலாளா் ராம்நாத் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பின்னா் பொதுமக்கள் பக்தர்களுக்கு நிலவேம்பு கஷாயம் சாய் சித்த மருத்துவமனை பணியாளா்கள் வழங்கினா்.  அதனைத் தொடா்ந்து கோவில் வளாகத்தில் வைத்து திருவாசகி சிவபகவதி குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் மற்றும் அன்னதான பொதுவிருந்து நடந்தது.

முன்னதாக நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6-30 மணிக்கு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முதல் குத்துவிளக்கினை முத்துலெட்சுமிராமநாத் ஏற்றி துவக்கி வைத்தார்  திருவிளக்கு பூஜை நடத்துனா்.

தவணைசெல்வி திருவிளக்கு பூஜையினை நடத்தினார். நிகழ்ச்சியில் செல்வி, தேவி, பழனியம்மாள், உஷா, இந்திரா, பேச்சியம்மாள், சிவனம்மாள், சிவபார்வதி, உத்ராதேவி, காளியம்மளா், ராஜேஸ்வரி, கல்யாணிஅம்மாள், காளியம்மாள் ஸ்ரீதேவி, புனிதா உள்பட பலா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.  

என்னவொரு வெறி? எவ்வளவு குரூரத் தனம்?

1854358 rahulgandhi1 - 2026

நிச்சயமாக இவர்கள் முட்டாள்களில்லை. ஒரு தரப்பினர் சொல்வது போல் ‘பப்பு’ என்றோ, ’கோமாளி’ அல்லது ‘பைத்தியம்’ அல்லது ‘அறிவுக்குறைவு’ என்றோ சொல்லிவிடமுடியாது. இவர்களின் நடத்தை முழுக்க முழுக்க, தேச விரோதம், வெறி, குரூரத்தனம் ஆகியவை மட்டுமே! அதைத்தான் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது. 

ஆபரேஷன் சிந்தூர் – விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று தொடக்கத்தில் தெரிவித்தது காங்கிரஸ்.  காரணம் அப்போது பாகிஸ்தான் கூறி வந்த பொய்களை மட்டுமே நம்பியது காங்கிரஸ். அக்கட்சியின் சார்பில்  கூட்டங்களில் கலந்து கொண்ட ராகுல் காண்டி, அதையேதான் தனது பேச்சுகளில் எதிரொலித்தார்.  ஆனால் ஆபரேஷன் சிந்தூர்  குறித்த செய்திகள், சர்வதேச அளவில்  இந்தியாவின் மரியாதையை மெல்ல மெல்ல உயர்த்திக் கொண்டு வந்த போது,  வழக்கம்போல் பொறாமை அரசியலின் வெளிப்பாடாக  இப்போது இல்லாத பொய்களை எல்லாம் திரித்து கூறி தேசிய அரசியலில் அசிங்கப்பட்டு வருவது மட்டுமல்ல மக்களின் வெறுப்பையும் தொடர்ந்து பெற்று வருகிறார் ராகுல் காண்டி.

ஆப்ரேஷன் சிந்தூர் விஷயமாக  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஊடகங்களில் பேசியபோது,  மிகத் தெளிவாக ஒரு கருத்தை முன் வைக்கிறார்.  ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய போது  நாம் பாகிஸ்தானுக்கு மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொன்னோம். நாம் பயங்கரவாத கட்டமைப்புகளின் மீது மட்டுமே தாக்குதலை நடத்துகிறோம்; அந்த நாட்டின் ராணுவத்தின் மீதோ அல்லது பொதுமக்களின் மீதோ அல்ல என்பதை செய்தியாக சொன்னோம்.  ஆனால் அவர்கள் ராணுவம் தாங்களாகவே உள்ளே இழுத்துக் கொண்டது.  அவர்கள்  நம் செய்தியை மதிக்கவில்லை”  என்று இந்திய ராணுவம் செய்தி தொடர்புகளில் என்ன தகவலை சொல்லி வந்ததோ அதையே தன் குரலாக வெளியிட்டார்.

ஆனால் வழக்கம்போல் பொய்களை மட்டுமே திரித்து வெளியிடும் இந்திரா காங்கிரஸ்,  எதிர்க்கட்சி காண அரசியலைச் செய்யாமல், அவியலையும் ஒழுங்காக செய்யத் தெரியாமல்,  சமையலை எவரும் உண்ண முடியாமல் காறித் துப்ப வைத்திருக்கிறது.

ஜெய்சங்கர் பேசிய ஊடக பேட்டியில் மிகத் தெளிவாக  ஆபரேஷன் சிந்தூர் மூலம் அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினோம் என்று குறிப்பிடுகிறார்.  ஆனால் காங்கிரஸ் அதை ஆபரேஷன் சிந்தூர் நடப்பதற்கு முன் பாகிஸ்தானை எச்சரிப்பதற்காக வெளியுறவுத்துறை இவ்வாறு ஆபரேஷன் சிந்தூரை நடத்தப் போகிறோம் என்று  முன்கூட்டியே செய்தி அனுப்பியதாக பொய்யான தகவல்களை பரப்பியது. 

இவ்வாறு சமூகத் தளங்களில் பரப்பப்பட்ட போதே,  இந்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு துறை (பி ஐ பி)  தனது உண்மை சரிபார்ப்பு குழுவின் மூலம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.  இவ்வாறு ஜெய்சங்கர்  அப்படி  முன்பே தகவல் எதுவும் கொடுத்ததாக வீடியோ எதுவும்  வெளியில் வரவில்லை. என்று மறுத்தது. அதாவது இந்த வீடியோ செய்தி குறித்து ஃபேக்ட் செக் செய்து, முன்கூட்டியே தகவல் எதுவும் தரவில்லை என்பதை உறுதிப் படுத்தியது. 

பி ஐ பி யின் உண்மை சரிபார்ப்பு குழு மே 15ஆம் தேதி இவ்வாறு எக்ஸ் தளத்தில் தெளிவாக வெளியிட்டது .

ஆனாலும் நான்கு நாட்கள் கழித்து மலினமான அரசியலுக்காக பாகிஸ்தானின் குரலை பேசும் வகையில்,  இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தப் போவதாக முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது என்ற போது இந்தியாவின் எத்தனை விமானங்கள் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டன அதற்கான கணக்கை வெளியிடுங்கள் என்று மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் அவர் சமூக வலைதளங்களில் பதிந்தது பலரையும் முகம் சுளிக்க மட்டுமல்ல கடுமையான கோபத்தையும் வர வைத்துள்ளது.  

சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பேசிய வீடியோக்களில் ராணுவம் குறிப்பிட்டபடி, நாம் முதலில் பயங்கரவாத முகாம்களைத் தான் குறிவைத்துத் தாக்குவோம் என்ற செய்தியை அவர்களுக்குக் கொடுத்தோம் என்றுதான் மே 10க்குப் பிறகான பேட்டிகளில் சொல்கிறார்.

செய்தி தெளிவு –  நாங்கள் தாக்குவது பயங்கரவாத முகாம்களை – இராணுவமோ பொதுமக்களோ அல்ல என்ற செய்தியை – என்பதாகத்தான் சொன்னார். இந்த வார்த்தைகளை குயுக்தியாக எடுத்துக் கொண்டு, வழக்கம்போல் வெட்டி ஒட்டி செய்யும் வேலைகளை செய்து ராகுல் பேசும் அரசியல் – கோமாளித்தனமாகத் தெரியவில்லை, குரூரத் தனமாகவே தெரிகிறது.

இவ்வாறு சமூகத் தளங்களில் பொய்களைப் பரப்புபவர்கள் – “நாங்கள் இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்” என்று தடயங்கள் எதுவும் இல்லாத வெற்றுப் பொய்களை மட்டுமே சொல்லி வந்த பாகிஸ்தானின் குரலையே ராகுல் எதிரொலிக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், அதிலும் அவர்களை அறியாமல் பாகிஸ்தானுக்கும் ஒரு தீயதையே செய்திருக்கிறார்கள். முன்கூட்டியே தகவல் வரப்பெற்றும், பாகிஸ்தான் தனது பயஙகரவாத முகாம்களையும் பயங்கரவாதிகளையும் பாதுகாக்காமல், பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்காமல், இப்படி பலரையும் சாகடிக்க வைத்துள்ளதே – என்று பாகிஸ்தான் மக்கள் யோசிக்க மாட்டார்களோ?! ஒருவேளை அப்படியெல்லாம் யோசித்து அரசியல் செய்வதற்கு பாகிஸ்தானில் இந்திரா காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களைப் போன்ற தேச விரோதிகள் இல்லை என்ற தைரியம் தான் காரணமோ?!

இவ்வளவு நடந்த பிறகு, பொய்யான போலியான கருத்துகளைத் திரித்து வெளியிட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 

அப்பாவி சுற்றுலா பயணிகளை கொலை செய்தால் கண்டிப்பாக இந்திய ராணுவம் களத்தில் இறங்கும் என்பது, உலகத்திற்கே தெரிந்திருக்கும்போது, பாகிஸ்தானுக்குத் தெரியாதா என்ன?! காரணம், காஷ்மீருக்குள் பயங்கரவாதப் போர்வையில் இந்தப் படுகொலைகளைச் செய்ய அனுப்பப்பட்டவர்கள் நம் ராணுவத்தின் பயிற்சி பெற்ற இரண்டு கமாண்டோகள் என்பது பாகிஸ்தான் ராணுவத்துக்கு புரியாதா என்ன.  அல்லது அவர்களை இந்திய ராணுவம் சரியாக அடையாளம் கண்டு வெளிப்படுத்தும் என்பதும் அதற்கு தெரியாதா? என்ன?!  ஆனால் ராகுல் காண்டிக்குத் தெரியாமல் போனது அதிசயம் தான்!

இப்போது, எந்தத் தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருக்கிறார் என்ற கேள்விகளை நாட்டு மக்கள் எழுப்புகிறார்கள். முன்னர், சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்ததாக இந்திய ராணுவம் சொன்னபோது, Surgical strike பற்றிய ஆதாரத்தை இந்திய ராணுவம் வெளியிட வேண்டும் என கேட்டவர்தானே ராகுல் காண்டி. 

பொய்களை மட்டுமே ஊடகங்களிலும், அந்நாட்டு பார்லிமெண்டிலும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமருக்கும், இந்திய எதிர்க் கட்சித் தலைவருக்கும் எந்த வித்தியாசமும் தென்படவில்லை. 

சீனாவின் டம்மியான டிரோனை பேட்டியின் போது  கையில் வைத்துக் கொண்டு இதே போன்ற கருவிகளை இந்தியாவால் செய்ய முடியாது என சீன அரசுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்ததும் இதே ராகுல் காண்டி. 

இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று தாக்கவில்லை என இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்த பின்பும் ராகுல் சந்தேகம் கிளப்புகிறார். 

ராணுவம் சொன்னபடி, இந்திய எல்லைக்குள் மட்டுமே பறந்து பாகிஸ்தானை வீழ்த்தியதாக இருந்தால், இந்திய நாட்டின் எல்லைக்குள் பறந்த விமானங்களை பாகிஸ்தான் எப்படி சுட்டு வீழ்த்தியிருக்க முடியும் என்ற  அடிப்படைக் கேள்வி கூட ராகுலுக்குத் தோன்றவில்லையா!?

ஒருவேளை அப்படி ஒரு விமானத்தையாவது  பாகிஸ்தான் தாக்கி இருந்தால், அனைத்து விமானங்களையும் இந்தியா பாகிஸ்தானுக்கு பேரழிவைப் பரிசாக அளித்திருக்குமே! 

இந்திய விமானங்கள் எல்லை தாண்டிச் சென்றிருந்தால் மட்டுமே பாகிஸ்தான் ஏவுகணைகளைக் கொண்டு அவற்றைத் தாக்கி இருக்க முடியும். அவ்வாறு பாகிஸ்தான் தாக்கி இருந்தால் இந்திய விமானப் படையின் அந்த விமானங்களைக் காட்சிக்கு வைத்து உலகுக்கே இந்நேரம் பீற்றிக் கொண்டிருப்பார்களே! அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றபோதே, உணமையை உணர்ந்து கொள்ள வேண்டாமா?!

இப்போது, பாகிஸ்தான் மீடியாக்களில் ராகுல் காண்டியின் பேட்டி தான் தலைப்புச் செய்தியாக சென்று கொண்டு வருகிறது! இந்திய எதிர்க்கட்சித் தலைவரே ஒப்புக் கொண்டார் பாகிஸ்தான் ரபேல் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதை என பேசிக் கொண்டிருக்கிறார்கள்! ராகுல் செய்வது எதிர்க்கட்சி அரசியல் அல்ல, தேச விரோதம் என்று தெரிந்ததால் தான், காங்கிரஸின் பழுத்த தலைகளே இப்போது காங்கிரஸை ஓரம் கட்டி விட்டு, அரசுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்திய நாட்டின் ரத்தம் ஓடும் எவருமே இப்படி அந்நிய நாடுகளுக்கு ஒத்தூதிக் கொண்டு வயிறு வளர்க்க மாட்டார்கள். 

இந்திரா காங்கிரஸ் – தேசியத்தின் சாபக்கேடு! ராகுல் காண்டி – நாட்டின் சாபக்கேடு!

IPL 2025: பிளேஆஃப் வாய்ப்பை இழந்த லக்னோ

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs ஹைதராபாத் – லக்னோ – 19.05.2025

லக்னோ பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (205/7, மிட்சல் மார்ஷ் 65, எய்டன் மர்க்ரம் 61, நிக்கோலஸ் பூரன் 45, ஈஷன் மலிங்கா 2/28, ஹர்ஷ் துபே, நித்தீஷ் குமார் ரெட்டி , ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கட், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (206/4, அபிஷேக் ஷர்மா 59, ஹென்றி கிளாசன் 47, இஷான் கிஷன் 35, கமிந்து மெண்டிஸ் 32, அதர்வா டைடே 13, திக்வேஷ் ரத்தி 2/37, வில் ஓ ரூர்கே, ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கட்) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் லக்னோ அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மிட்சல் மார்ஷ் (39 பந்துகளில் 65 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் எய்டன் மர்க்ரம் (38 பந்துகளில் 61 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் அற்புதமான தொடக்கம் தந்தனர். ரிஷப் பந்த் (7 ரன்) இந்த ஆட்டத்திலும் சரியாக ஆடவில்லை. நிக்கோலஸ் பூரன் (26 பந்துகளில் 45 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினார். இவருக்குப் பின்னர் வந்த ஆயுஷ் பதோனி (3 ரன்), அப்துல் சமத் (3 ரன்), ஷர்துல் தாகூர் (4 ரன்), ரவி பிஷ்னோய் (ஆட்டமிழக்காமல் 4 ரன்), ஆகாஷ் தீப் (ஆட்டமிழக்காமல் பூஜ்யம் ரன்) வேகமாக ரன் சேர்க்கும் முயற்சியில் வந்தது ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.

          206 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு அவர்களது தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் இன்று விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அதர்வா டைடே (13 ரன்) விளையாடினார். அவர் இரண்டாவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சன்ரைசர்ஸ் அணி ஜெட் வேகத்தில் ரன் சேர்த்தது.

அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் அரைச் சதம் அடித்தார். அபிஷேக் ஷர்மா (20 பந்துகளில் 59 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்), இஷான் கிஷன் (28 பந்துகளில் 35 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ஹென்றி கிளாசன் (28 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), கமிந்து மெண்டிஸ் (21 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர்) ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

இடையில் அபிஷேக் ஷர்மாவுக்கும் திக்வேஷ் ரத்திக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு அதற்காக திக்வேஷ் 50% ஆட்டச் சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலு ஒரு ஆட்டம் ஆட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அபிஷேக் ஷர்மாவுக்கு 25% ஆட்டச் சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது. இறுதில் 18.2 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

          அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி லக்னோ பிளேஆஃப் சுற்றுக்குச் செல்வதைத் தடுத்துவிட்டது.

இனி பிளே ஆஃப்க்குச் செல்லும் அணி மும்பையா அல்லது டெல்லியா என்பது தீர்மானிக்கப்படவேண்டும்.  

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

modi in vizhignam - 2026

ப. சிதம்பரமே பாஜக-வைப் பாராட்டுகிறார். என்ன செய்தது பாஜக?

— ஆர். வி. ஆர்

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இரண்டு விஷயங்கள் சொன்னார்.

ஒன்று: “இண்டி கூட்டணி இன்னமும் ஒன்றிணைந்து இருப்பதாக இந்தப் புத்தகத்தின் இரு ஆசிரியர்களில் ஒருவர் சொல்கிறார். ஆனால் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.”

இரண்டு: “பாஜக மாதிரி வலிமையாக, அசைக்க முடியாதபடி அமைக்கப் பட்ட (formidably organised) ஒரு அரசியல் கட்சி வேறெதுவும் இல்லை. இதை எனது அனுபவத்திலும் சரித்திரம் படித்ததன் வாயிலாகவும் நான் சொல்கிறேன்.”

இந்த இரண்டு விஷயங்களைச் சிதம்பரம் தெளிவாகச் சொன்னாலும், அவை அவர் மூலமாகப் பொதுவெளியில் தெரிவிக்கப் படுவது அதிர்ச்சி தரலாம், கட்சிக்குள் அவரே கேள்வி கேட்கப் படலாம் என்பதால், தனது பேச்சிலேயே சில ‘ஷாக் அப்சார்பர்’ வார்த்தைகளையும் சேர்த்து அவர் பேசி இருந்தார். என்ன இருந்தாலும், சிதம்பரமே சொன்னதால் அந்த இரண்டு விஷயங்களின் உண்மைத் தன்மைக்கு 200 சதவிகித உடனடி கேரண்டி உண்டு.

இண்டி கூட்டணியின் பல்வேறு கட்சிகளிடையே ‘நம்மில் யார் அடுத்த பிரதமர்?’ என்ற உள் போட்டி இருப்பதால், அந்தக் கூட்டணி கரைந்து கிடக்கிறது. அது ஊரறிந்தது. பாஜக-வின் வலிமை பற்றிச் சிதம்பரம் சொன்னதை மட்டும் உன்னிப்பாகப் பார்க்கலாம்.

ஒரு அமைப்பு அல்லது அரசியல் கட்சியின் வலிமை அதை வழிநடத்தும் மனிதர்களின் தலைமைப் பண்புகளிலிருந்து, அவர்களின் மதியூகத்திலிருந்து, ஆரம்பிக்கிறது – அங்குதான் பெரிதும் தங்கி இருக்கிறது.

காங்கிரஸ் மாதிரி சுயநலம் மிக்க தலைவர்கள், ஆட்சியில் முறைகேடுகளுக்கு வழிசெய்து கொடுக்கும் தலைவர்கள், குடும்பவழித் தலைமையை வளர்க்கும் தலைவர்கள், நிறைந்த கட்சி ஒரு ஜனநாயகத்தில் வலிமையான கட்சியாக நீடிக்க முடியாது. தில்லுமுல்லுகள் சில காலம் அவர்களின் கட்சியை உயர்த்தி வைத்திருக்கும் – அதாவது மக்களின் அறியாமை நீடிக்கும் காலம் வரை. மக்கள் விழித்துக் கொள்ளாத நிலையில், எந்த அரசியல் கட்சி போட்டிக் கட்சிகளை விடக் கில்லாடியாக அரசியல் நாடகங்கள் நடத்துமோ அது வலிமை பெறும் – தமிழகத்தில் திமுக மாதிரி.

சரி, பாஜக வலிமையான கட்சி என்று சிதம்பரம் சொல்கிறாரே, அப்படியானால் இந்தியாவின் பல மாநிலங்களின் அரசியல் களத்தில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறதே, அங்கெல்லாம் சாதாரண மக்களின் அறியாமை அகன்று விட்டதா? அங்கெல்லாம் இனிமேல் மக்களை எளிதில் ஏமாற்றி, ஜிகினா வாக்குறுதிகளை வாரி வழங்கி, ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெல்ல முடியாதா? அதெல்லாம் இல்லை.

பாஜக-வின் அரசியல் வெற்றி ஏன் பிரமிக்கத் தக்கது என்றால், அந்தக் கட்சி மக்களின் அறியாமையைத் துஷ்பிரயோகம் செய்யாமல் வலிமை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் சிதம்பரத்தால், அந்த வழியில் பாஜக பெற்ற தேர்தல் வெற்றிகளையும் அதன் வலிமையையும் நினைத்தே பார்த்திருக்க முடியாது. இருந்தாலும் பாஜக-வின் வலிமையை உணர்ந்து அதைப் பொதுவெளியிலும் ஒப்புக் கொண்டுவிட்டார் – ஆள் ஒரு வினாடி அசந்திருந்தாலும் இருக்கலாம்!

அகில இந்திய அளவில், நரேந்திர மோடியின் தலைமையில், பாஜக படிப்படியாக வலிமை பெறும் போது பிற அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு சாதாரண மக்களின் ஏழ்மையை, இயலாமையை, அறியாமையை, துஷ்பிரயோகம் செய்து குயுக்தி அரசியல் செய்து வருகின்றன. இந்திரா காந்தி காலம் தொடங்கி இன்று வரையிலான காங்கிரஸ் கட்சியும் அதில் அடக்கம். பாஜக அந்த வழியில் செல்லாமல் போட்டிக் கட்சிகளைத் தாண்டி அதிக மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. 2014, 2019, 2024 ஆகிய மூன்று லோக் சபா தேர்தல்களிலும் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. இது எப்படிச் சாத்தியம் ஆனது?

தன்னலம், தன் குடும்ப நலன், ஆகிய நோக்கங்களைக் கொண்டு, அரசியலில் கவர்ச்சி வார்த்தைகள் பேசி, ஏமாற்று வேலைகள் செய்து, பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் அளித்து, மற்ற அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. சமீப காலம் வரை இவற்றில் ஒரு கட்சியை அல்லது ஒரு கூட்டணியைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்துவதை விட சாதாரண மக்களுக்கு வேறு வழி இல்லாமல் போனது – மத்தியிலும் மாநிலங்களிலும். இன்னும் சாதாரண மக்களின் அறியாமை அவர்களுக்கு ஒரு விலங்காக இருக்கிறது.

பாஜக மாறுதலாகச் செயல் படுகிறது. தனது நேர்மையான ஆட்சியின் மூலம் சாதாரண மக்களுக்கு அசாத்திய நன்மைகள் செய்து கொடுத்து, அவர்கள் மனதில் இடம் பிடித்துத் தனது மக்கள் செல்வாக்கைக் கூட்டிக் கொள்கிறது பாஜக. அதன் மூலம் அந்தக் கட்சியின் வலிமையும் அதிகரிக்கிறது. இதைப் பெரிய அளவில் செய்து காட்டியது, நரேந்திர மோடி. இது நடந்தது, பன்னிரண்டரை ஆண்டுகள் (அக். 2001 முதல் மே 2014 வரை) அவர் தொடர்ச்சியாக குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த போது.

பின்னர் 2014-ல் இருந்து இன்றுவரை மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கையில் பாஜக-வின் வலிமை மேலும் கூடி வருகிறது. மோடியின் தனிப்பட்ட மனிதப் பண்புகளும் குணாதிசயமும் பாஜக-வின் வலிமைக்கு முக்கிய காரணங்கள்.

நிர்மலா சீதாராமன் பாஜக-வில் சேர்ந்த 6 ஆண்டுகளில் மத்திய மந்திரிசபையில் சேர்க்கப் பட்டார். ஜெய்சங்கர் மத்திய மந்திரிசபையில் வெளிவிவகார அமைச்சரான அடுத்த மாதம்தான் பாஜக-வில் சேர்ந்தார். அண்ணாமலை கட்சியில் சேர்ந்த பதினோரு மாதங்களில் தமிழக மாநிலத் தலைவர் ஆனார்.

திறமைசாலிகள் எங்கிருந்தாலும், அவர்கள் நீண்ட நாள் கட்சியில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், நாட்டு நலனையும் கட்சி நலனையும் முன்னிட்டு அவர்களை மத்திய மந்திரிகள் ஆக்கியது, மாநிலத் தலைவர் ஆகியது, மோடி. சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கோலோச்சும் காங்கிரஸ் கட்சியில், அந்தக் கட்சி தலைமை ஏற்கும் ஆட்சியில், இதை எண்ணிப் பார்க்க முடியுமா?

நாட்டு நலனை நெஞ்சில் நிறுத்தி, அதற்காகத் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்குகிறார் மோடி. பொதுமக்களைச் சந்திக்கும் போது பெரும் பணிவை வெளிப்படுத்துகிறார். அதோடு, சாதாரண மக்களின் அன்றாட வாழ்வைத் தொடும் பல சவுகரியங்களை ஒவ்வொன்றாக அரசு மூலமாக ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

சாதாரண மக்கள் எளிதில் நேரடியாக உணர முடியாத ஒரு சக்தியும் மோடிக்கு உண்டு: குயுக்தியான எதிர்க் கட்சிகளை வீழ்த்த, அவர்களை விட இரண்டு மடங்கு சாமர்த்தியத்துடன் அரசியல் செய்கிறார். இதில் அமித் ஷா மோடியின் தளபதியாக இருப்பது மோடிக்கு யானை பலம்.

மோடியைப் போல் ஒரு உன்னதத் தலைவருடன் பணி செய்வது தங்களின் பாக்கியம் என்று கருதி, அதனால் உற்சாகமும் உத்வேகமும் கூடி, அவரது அமைச்சரவை சகாக்கள் வேலை செய்து சாதனைகள் புரிகிறார்கள். அதனாலும் பாஜக பெரும் வலிமை கொள்கிறது. வார்த்தைகளால் எளிதில் முழுவதும் விளக்க முடியாத மோடியின் பெருமை அந்த வலிமையின் மையம்.

சரி, கெட்டிக்கார சிதம்பரத்திற்கு பாஜக-வின் வலிமை மட்டும் தான் தெரியும், அதிலுள்ள மோடியின் பெரும் பங்கு தெரியாதா? தெரியும். ஆனால் மோடியின் தனிப்பட்ட பெருமையையும் பொதுவில் எடுத்துச் சொல்லி, ராகுல் காந்தியின் சீற்றத்துக்கு ஆளாகி நஷ்டப் படும் அளவுக்குச் சிதம்பரம் அப்பாவியோ அசடோ அல்லவே!

Author: R. Veera Raghavan – Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

kadeswara subramaniam hindu munnani - 2026

சட்டவிரோதமாக ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழகத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஊடுருவி வருகின்றனர். குறிப்பாக பங்களாதேஷ் போன்ற வெளிநாட்டினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான தங்கியுள்ளனர். இவர்களால் தமிழகத்தினுடைய உள்நாட்டுப் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

உதாரணமாக கடந்த காலங்களில் பல சட்டவிரோத செயல்களில், போதை மருந்து கடத்தல் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாக பங்களாதேசை சேர்ந்தவர்கள் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், சென்னை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக போலி பாஸ்போர்ட், ஆதார் முதலியன தயார் செய்து இருந்து வருகின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் மிகப் பெரிய நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பங்களாதேசத்தை சேர்ந்தவர்கள். அதேபோல் அவினாசியில் பூர்ணா தேவி என்ற பெண்ணை வேலை செய்யும் இடத்தில் காதலித்து பங்களாதேஷுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு எந்தவித பாஸ்போர்ட், விசா கிடையாது.

பின்பு அந்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்து விட்டாள். பூர்ணா தேவி உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர முடியவில்லை. அதேபோல திருப்பூர் மங்கலம் ரோட்டில் ஒரு மளிகை கடையில் வேலை செய்த பங்களாதேசை சேர்ந்த முசுருதீன் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.

சமீபகாலமாக கோயமுத்தூர் – தொண்டாமுத்தூர் பகுதியில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா, பங்களாதேஷிகள் ஊடுருவி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் மாண்புமிகு உயர்நீதிமன்ற விசாரணையில் 48,000 பங்களாதேஷிகள் தமிழகத்தில் உள்ளதாக மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஈரோடு, பெருந்துறை,;திருப்பூர் பகுதியில் காவல்துறையினர் பங்களாதேசை சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். சட்ட விரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ள பங்களாதேஷிகளை கண்டுபிடித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தினைப் பாதுகாக்க வேண்டும். சாதாரண சட்டம்-ஒழுங்கு காவல்துறையினர் ரோந்து செல்லும் பொழுது விசாரித்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் இது நிரந்தரத் தீர்வாகாது. முழுமையான நடவடிக்கை ஆகாது.

பல்வேறு இடங்களில் தொழிலாளிகளைப் போல, வியாபாரிகளைப் போல ஊடுருவி வருகின்றனர். இவர்களை பெருக விட்டால் அசாம், மேற்கு வங்காளம் மாநிலங்களைப் போல நமது மாநிலத்திலும் பொருளாதாரத்திற்கும் வியாபார வர்த்தகம், பொது பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்.

இதற்காக காவல்துறையில் தனியாக ஒரு துறை ஏற்படுத்தி, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்கு அந்த அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இப்பொழுது சட்டம் ஒழுங்கு போலீசார் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஒவ்வொரு முறையும் சென்னை புழல் சிறையில் அடைத்து விசாரணை நடத்த பொழுது கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் கைதிகள் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகிவிட்டார்.

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். எனவே தமிழக காவல்துறையில் இதனை தடுக்க சிறப்பு புலனாய்வு அமைப்பு ஒன்றை ஏற்படுத்திட வேண்டும். இந்த வெளிநாட்டு ஊடுருவக்காரர்களை கண்டுபிடித்து நாடு கடத்த வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

siliguri corridor west bengal - 2026
  • ஜெய்ஹிந்த் ஸ்ரீராம்

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ் காபந்து அரசின் முகமது யூனுஸ் சீனாவின் நீண்ட கால கோரிக்கை ஒன்றுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக வான்டட் ஆக வந்து அறிவித்திருந்தார்.

அது சிலிகுரி பகுதியை ஒட்டிய இடத்தில் சீனாவின் ஏர்-பேஸ் ஒன்றை கட்டிக் கொள்ள அனுமதிப்பது ஆகும். முதலில் நமக்கு சிலிகுரி பகுதியில் என்ன இருக்கிறது என தெரிய வேண்டும். அல்லது அது எங்கு அமைந்துள்ளது என்று தெரிந்து இருக்க வேண்டும்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை தரை மார்க்கமாக இணைக்கும் மிக மிக குறுகலான நிலப்பரப்பை தான் சிலிகுரி காரிடர் என்கிறோம். இதனை கோழிக்கழுத்து என்பர். பார்ப்பதற்கு வரைபடத்தில் அப்படி ஒரு தோற்றத்துடன் அது இருக்கும். வெறும் இருபது கிலோமீட்டர் குறுக்கு அளவு கொண்ட இடம்……சில இடங்களில் அது கூட 14 கிலோமீட்டருக்கு கீழே வந்து விடுகிறது.தற்சமயம் மேற்கு வங்க மாநிலத்தின் மேல் பகுதியில் வருகிறது.

சொல்லவா வேண்டும் மம்தா பானர்ஜி பற்றி ஓசைப்படாமல் ஒன்பது லட்சம் ஆதார் அடையாள அட்டைகளை வாரி வழங்கி இருக்கிறார் இவரது ஆட்சி காலத்தில்! ஒருத்தரும் இந்தியர் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க முடியும் என்கிறார்கள். ஆன போதிலும் நடவடிக்கைகள் எடுப்பதில் பல நடைமுறை சிக்கல் உள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இப்படி ஆதார் அட்டை பெற்ற ஒருவர் கூட தற்சமயம் மேற்கு வங்காளத்தில் இல்லை. பிறகு? தென்னிந்திய மாநிலங்களில் குடிபெயர்ந்திருக்கிறார்கள்.

ஆப்ரேஷன் ஸிந்தூர் நடவடிக்கைகளின் போது. ஏழு இந்திய வடக்கிழக்கு மாநிலங்களை பிடித்துவிட வேண்டும் என்றெல்லாம் பேட்டி கொடுத்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவை அடித்து விரட்டி விட்டு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் என்பவரை பிடித்து வந்து பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள்.இது நடந்தது ஜோபைடன் ஆட்சி காலத்தில். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற்றது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்தார்.

உடனடியாக இவர் பங்களாதேஷ் விட்டு பொட்டிபடுக்கையுடன் கிளம்ப தயாராகி இருந்தார். அதற்கேற்ப டொனால்ட் ட்ரம்ப் நம் இந்திய பிரதமர் சந்திப்பில், இது குறித்து செய்தியாளர்களிடம் கேட்டதற்கு. அவர் (அதாவது நம் இந்திய பிரதமரை) எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் .கூடவே என்னை விட சிறப்பாக செய்வார் என முண்டியடித்து பதில் தந்தார் ட்ரம்ப்.

இது நடந்தது பிப்ரவரி மாதத்தில்! ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற அத்தனையும் சீர் தூக்கிப் பார்த்தால், அதே பிப்ரவரி மாதத்தில் தான் ஏகப்பட்ட விஷயங்களுக்கான முன்னெடுப்பு நடந்திப்பது ஒவ்வொன்றாக தெரியவருகிறது. அத்தனையிலும் இந்திய எதிர்ப்பு ஏதோ ஒரு வகையில் இருக்கின்றது. யார் என ஆராய்ந்து பார்த்தால், டொனால்ட் ட்ரம்ப்பின் மகனை கை காண்பிக்கிறார்கள் இம்முறை.

அவர் பற்பல புதிய நிறுவனங்களை தொடங்கி இருக்கிறார் / வாங்கி இருக்கிறார். அல்லது இயக்குனராக வருகிறார். அந்த நிறுவனங்கள் அத்தனையும் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. இந்நிறுவனங்களின் துரப்பணி எல்லாம் பாகிஸ்தானிய பங்களாதேஷ் ஒட்டிய இடங்களாகவே வருகிறது. அமெரிக்க அதிபர் நம் இந்திய பிரதமர் சந்திப்பின் பின்னரான காலத்தில் தான் காட்சிகள் எல்லாம் மாற்றம் கண்டு இருக்கிறது.

நம் இந்திய பிரதமர் எதற்கோ நோ சொல்லி இருக்கிறார். அழுத்தம் திருத்தமாக! அதன் வெளிப்பாடாக பற்பல விஷயங்கள் எல்லாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது மிக நன்றாக தெரிகிறது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கான வித்து பிப்ரவரி மாதத்தில் ஊன்றிடப்பட்டுள்ளது. அதி நவீன உயர் திறன் மிக்க செயற்கை கோள் புகைப்படங்களை அமெரிக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பெற்று இருக்கிறார்கள். அப்படி பெற்றது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருந்த போதிலும் அதன் இயக்குனர் பொறுப்பில் பாகிஸ்தானிய பிரஜை. அதுவும் கண்காணிப்பு குற்றவாளி ஒருவர் வருகிறார். இவரது நிறுவனத்திற்கான ஃபண்ட் அமெரிக்க கிராமின் சொசைட்டி வழங்கி இருக்கிறது. இதே கிராமின் வங்கி நிர்வாக குழு நிர்வாகிகளில் ஒருவராக நோபல் பரிசு பெற்ற யூனுஸ் வருகிறார். இவருக்கு ஒபாமாவே பரிசளித்திருக்கிறார். அந்த யூனுஸ் தான் இன்றைய பங்களாதேஷ் பிரதமர்.

மொத்த ஏழு நிறுவனங்களில் இருந்து பலருக்கும் ஃபண்ட்டிங் போயிருக்கிறது. பாகிஸ்தானில் மட்டும் 13 பேர் வருகிறார்கள்.அதில் முதல் இடத்தில் முனீர் வருகிறார். அதாவது பாகிஸ்தானிய ராணுவ தலைமை தளபதியே தான். ஆஸிம் முனீர் தான் அது.

ஆக இது அத்தனையும் இயற்கை எரிவாயு கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு தான் இத்தனை ஆர்ப்பாட்டமா என்றால். ஆம். கிட்டத்தட்ட இது அத்தனையும் பொருந்திப் போகிறது. பங்களாதேஷ் ஒட்டிய கடல் பிராந்தியத்தில் சுமார் 73,000 சதுர பரப்பளவில் இயற்கை எரிவாயு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே பாகிஸ்தானை ஒட்டிய அரபிக் கடலில் இதே போன்றதொரு படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதன் பரப்பளவு வெளியிடப் படவில்லை.

இவை இரண்டையும் கைக்கொள்ள அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ட்ரம்ப் குடும்பம் இதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் விருப்பங்கள் உண்டு. தவிர அடுத்த அதிபர் பதவிக்கு ஜூனியர் ட்ரம்பை கொண்டு வர உத்தேசித்து காய் நகர்த்தி வருகிறார்கள் ஒரு சாரார்.

இவற்றை எல்லாம் கணக்கிட்டு காய் நகர்த்த, நெப்போட்டிஸம், குடும்ப ஆட்சி, வாரிசுகள் அலப்பறை என்றாலே பற்றிக் கொண்டு வரும் பிரதமர் மோடிக்கோ, எரியும் தீயில் எண்ணெய் வார்த்தது போலானது. மிகத் தீவிரமான யுத்த முஸ்தீபுகள் முன்னெடுக்க இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

இவையும் இன்றுள்ள நிலையில் ஒத்துப் போகிறது. சொல்லி வைத்தது போலே அரபு நாடுகளில் விஜயம் செய்தார் டொனால்ட் ட்ரம்ப். ஒரு ட்ரில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் என்றார் பொது வெளியில். ஆனால் எங்கே எதற்கு என வெளிப்படையாக வாயே திறக்கவில்லை அவர்.

வாதத்திற்கு, பாகிஸ்தானிய பங்களாதேஷ் பகுதிகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுத்து இவர் என்ன செய்ய போகிறார். எதற்கு இத்தனை அக்கப்போர்? இவற்றை எடுத்து இவர் நமக்கே விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தார் என்றால் எத்தனை பெரிய எத்தன் இவர் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு இந்தியா துணை போகக்கூடாது என்பது இவரது வாதம். அதேசமயம் இங்கு உள்ள படுகையில் இருந்து எடுத்து இவர் நமக்கே விற்பனை செய்ய உத்தேசித்து காய் நகர்த்தி இருந்தார் என்றால் நம்மை எவ்வளவு தூரம் நினைத்துக் கொண்டு இருக்கிறார் பாருங்கள். இந்தியா விடுவதாக இல்லை. அதேசமயம் வெளிப்படையாக எதையும் பேசவில்லை.

ஆனால் காரியத்தில் கண்ணாக இருக்கிறார்கள். ராணுவ பயிற்சி ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி முடிந்திருக்கிறார்கள். இதில் AI தொழில்நுட்ப பண்புகள் மூலம் ரோபோடிக்ஸ் முறையில் சிலவற்றை முன்னெடுத்ததாக சொல்கிறார்கள். சில பல காரணங்கள் முழுமையாக இங்கு விளக்க வில்லை. அதுபோலவே நம் இந்திய தரப்பில் கடற்படை மூலம் நோட்டம் (Notification to Airmen) நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள்.

யூனுஸ் முற்றாக எங்கோ பதுங்கி இருக்கிறார். அநேகமாக ஆப்ரேஷன் ஸிந்தூர் போன்றதொரு நடவடிக்கையை பங்களாதேஷ் பக்கமும் வரவிருக்கும் நாட்களில் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது இவர்களின் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், ஏற்கனவே பங்களாதேஷ் துறைமுகத்தில் இருந்து எந்த ஒரு இறக்குமதியையும் இந்திய கிழக்கு பகுதியில் வரும் துறைமுகத்திலும் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறார்கள். பங்களாதேஷில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு மாத்திரமே அனுமதி கொடுத்து அதிர வைத்து இருக்கிறார்கள்.

நிலப் பரப்பு ஊடாக மட்டுமன்றி கடல் வழி பாதைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் நம்மவர்கள். ஏதோ ஒன்றை மிகத் தீவிரமாக மிகத் துல்லியமாக தெளிவாக முன்னெடுத்து வருகிறார்கள். நாமும் கொஞ்சம் பொறுந்திருந்து பார்க்கலாம்.

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

sindhupatti srinivasa perumal therottam - 2026

மதுரை, உசிலம்பட்டி அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் சிந்துபட்டி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பின் திருத் தேர்ரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது, தென் திருப்பதி என, அழைக்கப்படும் பழமையான வெங்கடாஜபதி பெருமாள் திருக்கோவில்.

இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 11 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் 18 ஆண்டுகளுக்கு பின் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

60 அடி உயரமுள்ள திருத்தேருக்கு வர்ணம் பூசப்பட்டு வெங்கடாஜலபதி பெருமாள் சுவாமியை திருத்தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோசங்களுடன் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வலம் வந்த திருத்தேரோட்டம், இறுதியில் கோவிலில் நிறைவுற்றது.

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

india won asia cup 2023 - 2026
#image_title

இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பெஹல்கமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அப்பாவி இந்திய சுற்றுலா பயணிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தது. அதன் மூலம் பாகிஸ்தான் நிலைகுலைந்த்து.

இதை அடுத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, தண்ணீரும் செந்நீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று குறிப்பிட்டு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தார். அதுபோல், வணிகமும் பயங்கரவாதமும் ஒன்றாக மேற்கொள்ள முடியாது என்றார். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என்றார். இதனால் பல்வேறு துறைகளில் இந்திய பாகிஸ்தான் உறவுகள் முற்றிலும் நின்று போயின. இதுவே உலக நாடுகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த நாடுகள், ஆயுதங்கள் அளித்த நாடுகளுகும் இந்தியா தனது உறவுகளில் திரைகளைப் போட்டு வருகிறது.

இந்த நிலையில், கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீசிக் கொண்டிருக்க முடியாது என்று குறிப்பிடும் வகையில் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகளை இந்தியா முற்றிலும் நிறுத்தி உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையான பிரச்சினைகளை மையப்படுத்தி அனைத்து விதமான ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் தற்காலிகமாக இந்தியா விலகியுள்ளது. பெஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் உடனான எந்த விதமான உறவையும் இந்தியா ஆதரிப்பது இல்லை. பாகிஸ்தான் அணி உடனான கிரிக்கெட் தொடர்களிலும் இந்தியா விளையாடாது என ஏற்கெனவே அறிவித்திருந்தது

இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்பு நடத்தும் மகளிர் மற்றும் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்தியா பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கக்கூடிய வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025 ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை ஏசிசிக்கு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள் மோசமடைவதால், இந்த நடவடிக்கை. 

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள மகளிர் வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பை 2025 போட்டியிலிருந்தும் பிசிசிஐ விலகியுள்ளது. தற்போது பாகிஸ்தானின் மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தலைமையிலான ஏசிசி, சர்ச்சையின் மையமாக உள்ளது. இந்திய அதிகாரிகளோ, தேச நலன் மற்றும் தேசிய உணர்வுகள் அதிகரித்துள்ள நேரம் என்பதை இந்த முடிவுக்கான காரணமாகக் குறிப்பிடுகின்றனர்.

பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறியபோது, “பாகிஸ்தான் அமைச்சரை தலைவராகக் கொண்ட ஏசிசி ஏற்பாடு செய்யும் போட்டியில் இந்திய அணி விளையாட முடியாது. அதுதான் நம் நாட்டின் உணர்வு. நாங்கள் எங்கள் விலகலை வாய்மொழியாகத் தெரிவித்துவிட்டோம், மேலும் ஏசிசி நிகழ்வுகளில் எங்கள் எதிர்கால பங்கேற்பும் இனி ஆய்வு செய்யப்படும்.” என்று கூறியுள்ளார். 

இந்தியாவின் இந்த முடிவு, 2025 ஆசியக் கோப்பையின் அடித்தளத்தையே சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாதம் டி20 வடிவத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. நடப்பு சாம்பியனான இந்தியா, 2023 பதிப்பின் இறுதிப் போட்டியில் இலங்கையை தோற்கடித்தது. எனவே இந்திய அணி மீண்டும் இந்த நிகழ்வில் தலைமை தாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பெரும்பாலான ஆசியக் கோப்பை ஸ்பான்சர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இந்தியா இந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கொண்டிருப்பதாலும், போட்டியின் போட்டித்தன்மையை மட்டுமல்ல, அதன் வணிக நம்பகத்தன்மையையும் அச்சுறுத்தியுள்ளதை பிசிசிஐ கவலையுடன் பார்க்கிறது. 

2023ல் பயன்படுத்தப்பட்ட கலப்பு வடிவம் போன்ற ஒரு சமரச மாதிரியை ஏதாவது ஒரு வகையில் யோசித்து, இந்தியாவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யாவிட்டால், இந்தத் தொடர்களே ரத்தாகும், அல்லது மேலும் தாமதத்துக்கு வழி செய்யக் கூடும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரை, இதன் விளைவுகள் தெளிவு. பிசிசிஐயின் உறுதியான நிலைப்பாடு, தலைமை மாற்றங்கள் செய்யப்படாவிட்டால், ஏசிசி குடையின் கீழ் நடைபெறும் நிகழ்வுகளை பெரிய அளவில் புறக்கணிக்க வழிவகுக்கும். 

குறிப்பாக, கடைசியாக ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடத்தப்பட்டபோது, ​​இந்தியா சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததன் விளைவாக, இறுதிப் போட்டி உட்பட அனைத்து இந்திய போட்டிகளும் இலங்கையில் நடத்தப்பட்டு, அதன்படி  ஒரு கலப்பு வடிவம் உருவானது.

பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 க்கு இது ஒரு கவலைக்குரிய முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. பாகிஸ்தான் ஏற்பாடு செய்யும் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்க பிசிசிஐயின் தயக்கம் அதிகரித்து வருவதால், ஐசிசி இடத்தை மாற்றவோ அல்லது நடுநிலையான மைதானங்களில் நடத்தும் முன்மாதிரியை ஏற்கவோ நேரிடும்.