இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டி-20 ஆட்டம்- ராஜ்கோட்-28 ஜனவரி 2025
இங்கிலாந்து அணி வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து அணி (20 ஓவர்களில் 171/9, பென் டக்கட் 51, லியம் லிவிங்க்ஸ்டோன் 43, ஜாஸ் பட்லர் 24, வருண் சக்கரவர்த்தி 5/24, ஹார்திக் பாண்ட்யா 2/33, அக்சர் படேல், ரவி பிஷ்னோய் தலா 1 விக்கட்) இந்திய அணியை (20 ஓவர்களில் 145/9, ஹார்திக பாண்ட்யா 40, அபிஷேக ஷர்மா 24, திலக் வர்மா 18, அக்சர் படேல் 15, சூர்யகுமார் யாதவ் 14, ஜேமி ஓவர்டன் 3/24, ப்ரைடன் கார்ஸ் 2/28, ஆர்ச்சர் 2/33, அதில் ரஷீத் 1/15) 26 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணியை மட்டையாடப் பணித்தார். இன்றைய ஆட்டத்தில் அர்ஷதீப் சிங்கிற்குப் பதிலாக முகமது ஷமி ஆடினார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (5 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கட் (28 பந்துகளில் 51 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) அணித்தலைவர் ஜாஸ் பட்லருடன் (22 பந்துகளில் 24 ரன்) இணைந்து விரைவாக ரன் குவித்தார்.
ஒன்பதாவது ஓவரில் ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்க, அதன் பின்னர் விளையாட வந்த ஹாரி ப்ரூக் (8 ரன்) 13ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதற்கு முன்னர் 10ஆவது ஓவரில் பென் டக்கட் அவுட் ஆனார். வருண் சக்ரவர்த்தியின் அபாரமான பந்து வீச்சால் மள, மளவென விக்கட்டுகள் விழுந்தன. ஆயினும் இறுதிக்கட்டத்தில் லிவிங்க்ஸ்டோன், அதில் ரஷீத், மார்க் வுட் ஆகியொரின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது.
அதன் பின்னர் ஆட வந்த இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (3 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா (14 பந்துகளில் 24 ரன்), சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 14 ரன்), திலக் வர்மா (14 பந்துகளில் 18 ரன்), வாஷிங்க்டன் சுந்தர் (15 பந்துகளில் 6 ரன்) என 13 ஓவர்களுக்குள் இந்திய அணி, 12.1 ஓவரில் 85 ரன்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்தது.
ஹார்திக் பாண்ட்யாவும் (35 பந்துகளில் 40 ரன்), அக்சர் படேல்-உம் (16 பந்துகளில் 15 ரன்) சற்று நிலைத்து ஆடியபோதும் இந்திய அணியின் ரன்ரேட் இங்கிலாந்து அணியின் ரன்ரேட்டைவிட எந்த நிலையிலும் அதிகரிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 9 விக்கட் இழப்பிற்கு 145 ரன் என்ற அளவிலேயே இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் முதன் முறையாக 26 ரன் கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வென்றது.
ஆட்ட நாயகனாக வருண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார். இன்று தோல்வியடைந்த போதும் இந்திய அணி தொடரில் 2-1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த ஆட்டம் ஜனவரி 31ஆம் தேதி புனேயில் நடைபெறும்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே திருப்புனவாசல் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் வெங்கட்ரங்கன் படத்திறப்பு விழா,குருவணக்கம்,முன்னாள் மாணவர்களின் மலரும் நினைவுகள் என நடந்த முப்பெரும் விழாவிற்கு ஸ்ரீ் ராமகிருஷ்ண தபோவன தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுத்தானந்த தலைமை வகித்து முன்னாள் மாணவ மாணவிகளுக்கு ஆசியுரை வழங்கினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன செயலாளர் ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த திருப்புனவாசல் பள்ளி செயலாளர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷ்ரானந்த தேவிபட்டிணம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி ஸ்ரீமத் ருத்ரானந்த,பாண்டிபத்திரம் மாணிக்கவாசகர் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீ மத் பக்தானந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முன்னாள் தலைமையாசிரியர் வெங்கட்ரங்கன் அவர்களின் பட வீதி உலா விருத்தபுரீஸ்வரர் கோயிலில் தொடங்கி நான்கு ரத வீதிகளை வலம் வந்து பள்ளியை அடைந்தது அதனை தொடர்ந்து அவரது படத்திறப்பு விழா அவரது குடும்பத்தார்கள் முன்னிலையில் சுவாமி சுத்தானந்த திறந்து வைத்தார்
அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை கவுரவித்தல்,முதல் தலைமையாசிரியர் இளங்கோவன் குடும்பத்தார்களை கவுரவித்தல் ஆகியன நடந்தது.விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் ஆசிரியர் சுப்ரமணியன் தலைமையில் முன்னாள் மாணவர்கள் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ மாணவிகள் ஒருவருக்கொருவர் பரிசு வழங்கியும் குருப் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.விழாவை முன்னிட்டு திருமணம் கோயில் விழா போல அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.
சிட்லப்பாக்கம் ரைசிங் சாரிடபிள் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தமிழக ஆளுநர் விருது -2024 குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டது.
ஒரே எண்ணம் கொண்ட மனிதர்களின் செயலானது சமுதாயத்திற்கு உதவும் விதமாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த அமைப்பு உள்ளது.
திரு. சுனில் ஜெயராம், திரு. தயானந்த் கிருஷ்ணன், திரு. வைத்தியநாதன், திரு. முரளி,ஆசிரியர், இலக்கியச் சாரல் , திரு. ராம் குமார், திரு. ஆனந்த், திரு. ஜெய், திருமதி. உதயவாணி, திரு. சுதாகர்,திரு. சுஜய், திரு. பிரகாஷ் செல்வி. சஞ்சனா மற்றும் பலரை முக்கிய உறுப்பினர்களாய் கொண்ட சிட்லப்பாக்கம் ரைசிங் சாரிடபிள் டிரஸ்டின் முயற்சிகள் இவை.
100 ஏக்கர் பரப்பளவில் இருந்த சிட்லப்பாக்கம் ஏரி ஒரு காலத்தில் விவசாய பாசனத்திற்கும் பயன்பட்டு வந்தது. மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததையும், எதிர்கால தலைமுறையினருக்கு நீரின் தேவை பற்றிய அக்கறை இல்லாததாலும் ஒரு சிலர் ஏரியை பல்வேறு வகைகளில் ஆக்ரமித்து இருந்தனர்.
ஏரியின் பரப்பளவும் 50 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கிப் போனது. ஏரி முழுவதும் ஆகாயத் தாமரைகளாலும், மக்காத பிளாஸ்டிக் பொருட்களாலும் எதற்கும் உபயோகப் படுத்த முடியாத அளவில் இருந்தது. மேலும் தரை மட்டத்திற்கு கீழே சுமார் 10 அடியும், தரை மட்டத்திற்கு மேலே சுமார் 20 அடி உயரமும் குப்பை மேடாக இருந்தது. மேலும் அந்த குப்பையை எரிக்கவும் புகைப்போக்கி ( insilator ) அமைத்தனர். இதானால் பெரும் துர்நாற்றம் வீசி மக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல நோய்களுக்கு உள்ளாகினர்.
காற்று, நீர் எனஎல்லாமே மாசுபட்டது. மேலும், பலமுறை முறையிட்டும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். அதோடு சேர்ந்தே கோடைக்காலத்தில் நீர் பற்றாக்குறை. அத்தியாவசிய தேவைகளுக்கே நீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய தூர்பாக்ய நிலை. மழை காலத்திலோ நல்ல மழை பொழிந்தாலும் ஏரியில் நீரை சேமிக்க முடியாத நிலை இருந்ததாம்.
இதனை கண்டு வேதனை அடைந்ததாலும், எதிர்கால தலைமுறையினரின் நலத்தை கருத்தில் கொண்டும் ‘பொறுத்தது போதும், பொங்கியெழுவோம், நமக்கு நாமே செய்திடுவோம்’ என்று செயலில் இறங்கி தன்னார்வலர்களை ஒன்று சேர்க்க ஆரம்பித்தது சிட்லப்பாக்கம் ரைசிங் டீம் அமைப்பு. முதலில் பத்துக்கும் குறைவான நபர்களே இருந்தனர்.
ஒரே எண்ணத்துடன் ஒரே மூச்சாக சிட்லபாக்கம் ஏரியை தூய்மைப்படுத்த இந்த அமைப்பினர் மேற்கொண்ட வழிகளை அறிந்த, பார்த்த பிறகு நூற்றுக்கணக்கானோர் இணைந்து செயல்பட்டனர்.
சிட்லப்பாக்கம் ரைசிங் டீம் தன்னார்வலர்களின் ஆர்வத்தையும், பொதுநல எண்ணத்தையும் புரிந்து கொண்டு மேலும் சில அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் ஆகியோரோடு முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் திரு. சி. சிட்லப்பாக்கம் ராசேந்திரன் அவர்களும் அன்றைய தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி ரூபாய் 25 கோடி ஒதுக்கி ஏரியை தூய்மைப்படுத்துதல், ஆழப்படுத்துதல், நடைபாதை அமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த இன்று நன்னீர் ஏரியாக மாறி உள்ளது என நினைவு கூறுகின்றனர், இந்த அமைப்பின் உறுப்பினர்கள். ஏரி தூர்வாருதல் பணி முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மீதமுள்ள பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
தங்களின் விடாமுயற்சிக்கு கிடைத்த விருதினை பெற்றுள்ள சிட்லப்பாக்கம் ரைசிங் டீம் மேலும் கூறுகையில் எதையும் கொண்டுவராத நாம் நீர் மற்றும் சுத்தமான காற்று உள்ளிட்ட பல்வேறு இயற்கை வளங்களை அனுபவிக்கும் நாம் எதிர்கால தலைமுறையினருக்கும் அதை விட்டு செல்ல வேண்டும்.
மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதையும், உற்பத்தியையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மரக்கன்றுகள் நட்டு குறிப்பிட்ட காலம் வரை அதை நன்கு பராமரித்து பசுமையையும், சுத்தமான சுவாசக் காற்றும் கிடைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து சமூக நலன் சார்ந்த தேவைகளின் அவசியத்தையும், பாதுகாக்க வேண்டிய வழி முறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சமூக நல சேவைகளில் ஈடுபடும் போது ஜாதி, மதம், மொழி இன வேறுபாடு பார்க்காது அனைவரும் ஒன்றே என்ற உணர்வுடன் ஈடுபட வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் மற்றும் மக்கள் தொடர்ந்து அரசின் கவனத்திற்கு நம் கோரிக்கைகளை கொண்டு சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தால் அது நிறைவேறும் என்பதற்கு சிட்லப்பாக்கம் ரைசிங் டீம் ஒரு முன் மாதிரியாக திகழ்கிறது என்பதே ஒரு சான்று.
சிட்லப்பாக்கம் ரைசிங் டீமிற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தமிழக ஆளுநர் விருதை -2024 தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் வழங்கினார். நகரின் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். சிட்லப்பாக்கம் ரைசிங் டீம் உறுப்பினர்களை அனைவரும் வாழ்த்தினர்.
கரூர் அருகே மண்மங்கலம் பகுதியில் தேசிய சாலைப்பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்
கரூர் அருகே மண்மங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு அதில், ஒரு பகுதியாக மண்மங்கலம் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகங்கள் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.
இந்நிகழ்வில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் ஒன்று பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தப்பட்டது. இதில் சுமார் 400 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மண்மங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சமூக நீதி என்று பேசிக் கொண்டிருக்கும் மூன்றாவது சக்தி, தமிழகத்தில் தலித் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி, சண்டையை உருவாக்கி வருகிறது என்று பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், சுவாமி சகஜானந்தர் ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தர் 135வது ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவை, தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி தொடங்கி வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது..
இந்திய கலாசாரம், ஹிந்து சமுதாயத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை அழித்தால் மட்டுமே, நாம் இந்தியாவில் நுழைய முடியும் என கார்ல் மார்க்ஸ், பிரிட்டிஷ் அரசிடம் தெரிவித்தார். மற்றொன்று, ‘உங்கள் கடவுள் தீய சக்தி, எங்களது கடவுள் உயர்ந்தது’ என கூறி மதம் மாற்றம் செய்ய கிறிஸ்துவ மிஷனரிகள் முனைந்தார்கள். தற்போது அந்த வரலாற்றை திருத்தி, பொய் சொல்லி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான் சுவாமி சகஜானந்தர், இரண்டு தீய சக்திகளை ஒதுக்கி வைத்து, கல்வி மூலம்தான் நம் சமுதாயத்தை வளர்க்க முடியும் என நினைத்தார். அதற்காக நந்தனார் கல்விக் கழகத்தை தொடங்கி வைத்தார். இன்றும், பட்டியல் சமூக ஊராட்சித் தலைவர்கள், அவர்களுக்குரிய நாற்காலியில் அமரமுடியாத நிலை உள்ளது. சில இடங்களில் மக்கள் காலணி அணிந்து நடக்க முடியவில்லை.
நாகப்பட்டினம், கீழ்வெண்மணியில் 48 தலித் சமூகத்தினர் மாவோயிஸ்ட் தூண்டுதலின் பேரில் தீயிட்டு எரிக்கப்பட்டனர். இன்னும் அப்பகுதி மக்கள் கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். அரசியல் காரணமாக அவர்கள் இன்றும் ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற காலக்கட்டத்தில்தான் சுவாமி சகஜானந்தர் நந்தனார் பெயரில் தலித் மக்களுக்கு கல்வி நிறுவனங்களை சிதம்பரத்தில் தொடங்கினார். அதனால் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த இரு சக்திகளுடன், தற்போது, சுதந்திரத்திற்கு பிறகு மூன்றாவது சக்தியாக சமூகநீதி தருகிறோம் என ஒரு சக்தி உருவெடுத்து, நமது கலாசாரம், நாகரிகம், தர்மத்தை அழிக்க முற்பட்டுள்ளது.
எனவே, நாம் சுவாமி சகஜானந்தர் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும். தலித் சமுதாயத்தில் 200க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. இந்த உட்பிரிவுகளுக்கு, தற்போது வந்துள்ள மூன்றாவது சக்தி சண்டையை ஏற்படுத்தி அரசியல் செய்து வருகிறது… – என்று பேசினார்.
ஆளுநர் ரவி, அவர்கள், சிதம்பரம் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி மதிய உணவு அருந்தினார். இந்த கல்வி நிறுவனம், கல்வி மூலம் தலித் சமூகத்தை மேம்படுத்துவதற்காக 100 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி சகஜானந்த அடிகளார் அவர்களால் நிறுவப்பட்டது. pic.twitter.com/kaBi79gDxx
இந்த விழா தொடர்பில் ஆளுநர் மாளிகை எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது…
சிதம்பரத்தில் நடைபெற்ற 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி ஏ.எஸ். சகஜானந்தர் அடிகளார் அவர்களின் 135 -ஆவது பிறந்தநாள் விழாவில், ஆளுநர் ரவி அவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நிலவிய சமூகத்தின் மிகவும் துன்பகரமான சமூக-அரசியல் மற்றும் கலாசார சூழலை விளக்கினார். அக்காலத்தில் சுவாமிஜி சமூகத்தைக் காக்கவும், ஒதுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் தோன்றினார்.
நமது பாரத கலாசாரத்தையும் அடையாளத்தையும் அழிக்க நமது சமூகத்தின் மீது இரண்டு விரோத வெளிப்புற சக்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவற்றில் ஒன்று சித்தாந்தம், மற்றொன்று இறையியல். இந்த சக்திகளுக்கு முக்கிய இரையாகியது பின்தங்கிய சமூகம்.
அந்த சக்திகளுக்கு சவால் விடுக்கும் வகையில் சுவாமிஜி அவர்கள், தலித் சமூகத்தில் இருந்து வந்த சிறந்த நாயனார் துறவிகளில் ஒருவரும் கவிஞருமான நந்தனாரால் ஈர்க்கப்பட்டு, சுரண்டலுக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களையும் பின்தங்கியவர்களையும் அணித்திரட்டி நமது ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன கல்வி மூலம் அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
ஆளுநர் அவர்கள், நாடு சுதந்திரம் அடைந்து சுமார் எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, நமது தலித் சகோதர சகோதரிகள் அனுபவிக்கும் அனைத்து வகையான சமூக பாகுபாடுகள் மற்றும் அட்டூழியங்களை முறியடிக்க, சுவாமி சகஜானந்தரின் போதனைகளை ஏற்றுக்கொள்வது அவசியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
சில வலிமையான சுயநலவாதிகள், சுவாமி சகஜானந்தர் பற்றியும், ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கான அவரது சிறந்த சேவை பற்றியும் நமது வரலாற்றில் இருந்தும் மக்களின் நினைவிலிருந்தும் அழிக்க முயல்வதை அவர் வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.
அடிகளார் அவர்களின் போதனைகள் நமது சமூகத்தின் உள்ளார்ந்த வலிமையை வளர்த்தெடுத்து, நமது நம்பிக்கையையும் சுயத்தையும் மீண்டும் தட்டியெழுப்பி, 2047 ஆம் ஆண்டுக்குள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்புவதை நோக்கி நம்மை வழிநடத்தும்.
கோவில் நிலங்களில் வசிப்பவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்து மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், வாடகைதாரராக மாறினால் மட்டுமே தொடர்ந்து கோவில் நிலத்தில் வசிக்க முடியும் என்று, கரூரில் திருத்தொண்டர் சபை அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.
திருத்தொண்டர் சபை அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். தரிசனம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது…
“தமிழகம் முழுவதும் திருக்கோவிலுக்கு சொந்தமாக ஐந்தரை லட்சம் ஏக்கர் இருப்பதாக ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது கால கட்டத்தில் சட்டசபையில் 4.78 லட்சம் ஏக்கர் இருப்பதாக சொல்கிறார்கள். மீதமுள்ள நிலங்கள் என்னானது என்று முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த உத்தரவின் அடிப்படையில் பெயரளவில் கண் துடைப்பிற்காக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சரியான ஒப்பீட்டு அளவினை அரசு வெளியிடாமல் தயங்கி வருகின்றனர். இதனால் பயனடையக் கூடிய ஒரு சில அலுவலர்களால் ஒட்டுமொத்த அறநிலையர் துறைக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது.
ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவது இல்லை. கருப்பு ஆடுகளை களை எடுக்காவிட்டால், உத்தமர்கள் போல் கொள்ளையடித்து கோடிக் கணக்கான ரூபாய் கோவில் நிலங்களுக்கு ஊறு விளைவித்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டமாக கோவில் நிலங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 2011 கரூர் மாவட்டத்தில்கோவில் நிலங்களின் நிலை குறித்து தெளிவாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தினோம்.
பொதுமக்கள் யாரும் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். திருக்கோயில் சொத்துக்களை தனி நபரோ, அரசோ, அரசு சார்ந்த நிறுவனங்கள் அனுபவிக்க முடியாது. திருக்கோயில் சொத்துக்கள் மைனர் சொத்துக்களாக கருத வேண்டும், அதனை விற்கவோ, வாங்கவோ முடியாது, அடமானல் வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. 200 ஆண்டுகள் கோவிலுக்கு சொந்தமான இடமாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக திருக்கோயில் வசம் மீட்டு கொண்டு வந்து விடக் கூடிய அனைத்து சாத்திய கூறுகளும் அறநிலையத் துறைக்கு உண்டு.
கரூர் மாநகராட்சி பகுதியில் அரசியல் தலையீடுகள் கடந்த ஆட்சியிலும் இல்லை, இந்த ஆட்சியிலும் இல்லை. ஆனால், இங்கு இருக்கக் கூடிய ஓய்வு பெற்ற ஒரு சில அலுவலர்கள், கொள்ளையடிக்கக் கூடிய மாஃபியா கும்பலின் பிடியிலிருந்து இங்குள்ள அலுவலர்கள் சுதந்திரமாக செயல்படாமல் இருந்து கொண்டு, அவர்களுக்கு அடிமைப் பணி செய்து கொண்டு ஒரு சிலர் உடந்தையாக இருந்து வருவதால் இங்குள்ள கோவில் நிலங்கள் வெற்றி அடைய முடியாத நிலையில் இருப்பதால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மனு தாரர்களின் சீராய்வு மனுவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
வாடகைதாரர்களாக வரும்பட்சத்தில் நீங்கள் தொடர்ந்து குடியிருப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். அதையும் மீறி குற்ற அலுவலர்களுடன் சேர்ந்தால் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கரூர் மாவட்டத்தில் நிச்சயமாக ஒரு குண்டுமணி இடம் கூட விடாமல் மீட்கப்படும். அரசு அலுவலர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதுடன், குற்றவழக்குகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஒரு மேல்நிலை குடிநீர்த் தொட்டி இருந்தது. அங்கு வசிக்கும் பட்டியலின மக்களின் நீர்த் தேவைகளுக்காக அது பயன்படுத்தப் பட்டது.
2022-ம் வருடம் யாரோ குரூரமாக அந்தத் தொட்டி நீரில் மனிதக் கழிவைக் கலந்ததால் அந்த மக்கள் பாதிப்படைந்து, அவர்களுக்கு நேர்ந்த அக்கிரமம் பொதுவெளியில் வந்தது. பின்னர் வழக்கு பதியப் பட்டு தமிழக சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்தனர். அது முடிந்து தற்போது போலீசார் தமது குற்றப் பத்திரிகையைக் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கின்றனர்
வேங்கைவயல் வழக்கின் குற்றப் பத்திரிகை சொல்கிறது: அதே ஊரைச் சேர்ந்த மூன்று நபர்கள் அந்தக் குற்றத்தைச் செய்தனர். குற்றத்திற்கான காரணம், சிலரது முன் விரோதம். குற்றப் பத்திரிகை குறிப்பிடாத ஒரு விவரம்: அந்த மூவரும் பட்டியலின சமூகத்தவர்.
விசிக, மார்க்சிஸ்ட்-கம்யூனிஸ்ட், அதிமுக, தமிழக பாஜக என்று ஆட்சியில் இல்லாத பிற கட்சிகள் சிபிசிஐடி சமர்ப்பித்த குற்றப் பத்திரிகைக்கு ஆட்சேபம் செய்கின்றன. வழக்கு மத்திய அரசின் சிபிஐ வசம் மாற்றப் பட வேண்டும், சிபிஐ புதிதாகப் புலன்விசாரணை செய்யவேண்டும், என்றும் கோருகின்றன. இந்தக் கட்சிகளின் பிரதான ஆட்சேபம் ஒன்று. அது விசிக-வின் தலைவர் திருமாவளவனின் அறிக்கையில் இப்படி வருகிறது.
“பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை”
இந்த ஆட்சேபமும், வழக்கைப் புதிதாக நடத்த சிபிஐ வரவேண்டும் என்ற கோரிக்கையும், அபத்தமானது, சமூகத்திற்குக் கேடு செய்வதும் கூட.
கீழான நோக்கத்தில் ஒருவர் தனியாகவோ கூட்டாகவோ செய்திருக்கக் கூடிய குற்றச்செயல் இது. எதுவாக இருந்தாலும், வழக்கிற்காக குடிநீர்த் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகள் ஆய்வு செய்யப் பட்டிருக்கின்றன. குற்றம் சாட்டப் பட்ட மூன்று நபர்களின் டி.என்.ஏ-வும் சேகரிக்கப் பட்டிருக்கிறது. அந்த மூவர் உபயோகித்த செல் போன்கள் கைப்பற்றப் பட்டு, அவற்றிலிருந்து முன்பு அழிக்கப்பட்ட சில படங்கள் மற்றும் உரையாடல்கள் மீட்டு எடுக்கப் பட்டிருக்கின்றன. சிலரின் குரல் மாதிரிகளும் சேகரிக்கப் பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் கோர்ட்டின் வசம் இருக்கின்றன. வழக்கை விசாரித்து, சாட்சியங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, கோர்ட் தீர்ப்பு சொல்லப் போகிறது.
இந்த வழக்கில் கீழ்க் கோர்ட்டின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறது? இறுதியாக இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றால் சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு சொல்லும்? இந்தக் கேள்விகளுக்கு இந்த நேரத்தில் யாருக்கும் விடை தெரியாது – எல்லா புது வழக்குகளையும் போல. எல்லோரும் பொறுத்திருந்து தான் இந்த வழக்கின் முடிவை, அதற்கான காரணங்களை, தீர்ப்பின் மூலம் அறிய முடியும்.
இந்த நிலையில் பிற கட்சிகள் சிபிசிஐடி-யின் குற்றப் பத்திரிகையை ஆட்சேபம் செய்வதிலும் ‘சிபிஐ வேண்டும்’ என்று கேட்பதிலும் என்ன அர்த்தம் இருக்கிறது?
சிபிஐ உள்ளே வந்தாலும், சிபிஐ செய்யும் புலன் விசாரணையின் முடிவில் அதே மூன்று நபர்கள் தான் குற்றவாளிகள் என்று தெரிய வந்தால் அதை அந்த மற்ற கட்சிகள் ஏற்குமா ஏற்காதா? ஏற்காதென்றால், “வேறு சமூகத்தைச் சார்ந்த சிலரைக் குற்றவாளிகள் என்று சொல்லும் மாறுதலான குற்றப் பத்திரிகையைத் தான் நாங்கள் ஏற்போம்” என்ற ஒரு நிபந்தனையோடு அந்தக் கட்சிகள் இந்த வழக்கில் சிபிஐ-யை எதிர் நோக்குகிறார்களா? அப்படியான ஒரு உத்தரவாதத்தை சிபிஐ முன்கூட்டியே தர முடியாதே? பிறகு எதற்கு சிபிஐ? ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனிக் காரணம் உண்டு, தனித்தனிப் பின்னணி உண்டு. குற்றம் செய்யும் ஒரு நபர் தன் ஊர்க்காரருக்கு, தன் ஜாதிக்காரருக்கு, தன் மதத்தவருக்கு குற்றம் இழைக்கலாம். தன் சொந்தக்காரரிடமே ஒருவர் குற்றம் புரியலாம்.
பணம் சொத்து விஷயங்களில் அண்ணன் தம்பிகள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, வெட்டுவது, கொலை செய்வது நடக்கின்றன. திருமண உறவு தடம் புரள்வதால் சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையின் கதையை முடித்து வைக்கிறார்கள். சில பெண் குழந்தைகளிடம் அவற்றின் நெருங்கிய உறவினர்களே அட்டூழியம் செய்த செய்திகளும் வருகின்றன. இந்தக் குற்றங்களில் ஒருவர் தன் மனிதருக்கே, சக ஜாதி மனிதருக்கே, கேடு செய்வது நிகழ்கிறதே?
வேங்கைவயல் வழக்கைப் பொறுத்தவரை குற்றம் சாட்டப் பட்ட மூவர்தான் குற்றத்தைச் செய்தனர் என்பதை நிரூபிக்க, கோர்ட் ஏற்கத்தக்க சாட்சியங்கள் உள்ளனவா என்பதுதான் முக்கியம். அவர்கள் என்ன சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது சட்டத்திற்கும் கோர்ட்டுக்கும் முக்கியம் அல்ல. ஆனால் சில அரசியல் கட்சிகளுக்கு அதுதான் முக்கியம் என்றாகிறது. இது ஏன்?
சுதந்திரம் அடைந்து 77 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பட்டியல் சமூகத்து மக்களின் கல்வி நிலையை, பொருளாதார நிலையை, நமது அரசை நடத்திய கட்சிகள் கணிசமாக மேம்படுத்தவில்லை – மற்ற சாதாரண மக்களின் நிலையும் அதுதான். அதனால் அரசியல்வாதிகளைப் பற்றி சரியான புரிதல் அம்மக்களுக்குக் கிட்டுவது சிரமம்.
பல ஜாதி எளிய மக்கள் “பட்டியலின மக்கள்” என்று ஒரு கொத்தில் வருவதால் அவர்களை ஒரே கூட்டமாக அரசியல் ரீதியில் ஏமாற்றுவது, அதன் வழியாக அரசியலில் கொழிப்பது, பலப்பல அரசியல்வாதிகளுக்கு சௌகரியம். யார் நம்மை ஏமாற்றி ஓட்டு வாங்கிக் கொழிக்கிறார்கள் என்று புரியாத அப்பாவிப் பட்டியலின மக்கள், அந்த மக்களின் நலனுக்காக என்று சொல்லி நடத்தப் படும் போராட்டங்களும் எழுப்பப்படும் கோரிக்கைகளும் அவர்களின் நலனுக்காகவே என்று எண்ணிப் பல நேரங்களில் ஏமாறுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் சில கட்சிகள் அறிவித்த ஆட்சேபத்தால், பட்டியலின மக்கள் வேறு சமூகத்தினரிடம் இருந்து மனதளவில் இன்னும் சற்றுத் தள்ளி இருப்பார்கள். அந்த வேறு சமூகத்தினருக்கும் இதே உள்ளுணர்வு ஏற்படும். முடிவில் இது அனைத்து சமூகத்திற்கும் நல்லதல்ல. சிபிசிஐடி-யின் குற்றப் பத்திரிகையை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு இது புரியவில்லையா?
மாநிலத்தை ஆளும் திமுக-வைப் பொறுத்தவரை, வேங்கைவயல் மக்களுக்கு ஏற்பட்ட அக்கிரமம் கோர்ட் வழக்காக மாறி, இந்த வழக்கை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பின்னர் உற்றுக் கவனிக்கும் என்றாகி விட்டது. ஆகையால், புலன் விசாரணையில் கிடைத்த சாட்சியங்கள் காட்டும் நபர்களை குற்றப் பத்திரிகையில் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டால்தான் கட்சியின் பேர் ரிப்பேர் ஆகாமல் இருக்கும், அதுதான் பாதுகாப்பான அரசியல், என்ற நிர்பந்தமும் இதில் சேர்ந்துவிட்டது – அதுவும் சமீபத்தில் அண்ணா பல்கலைக் கழக பாலியல் துன்புறுத்தல் எப்.ஐ.ஆர் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மாநில போலீசுக்கு வைத்த குட்டின் வலி இன்னும் ஆறாத நிலையில்.
கடைசியாக ஒன்று. அரசியல் கட்சிகள் எதையாவது சரியாகச் செய்தாலும் தவறாகச் செய்தாலும், அதன் நோக்கம் தாங்கள் தப்பிக்க, தாங்கள் பிழைக்க, தாங்கள் சுயலாபம் பார்க்க என்றுதான் இருக்குமோ?
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com
கட்சி ரீதியாக மொத்தம் – 67 மாவட்டங்கள். அறிவிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் – 63 அறிவிக்கப்படாத மாவட்ட தலைவர்கள் – 04
1.கன்னியாகுமரி கிழக்கு – K.கோபகுமார் 2.கன்னியாகுமரி மேற்கு- R.T.சுரேஷ் 3.தூத்துக்குடி வடக்கு – K.சரவண கிருஷ்ணன் 4.திருநெல்வேலி வடக்கு – A.முத்து பழவேசம் 5.திருநெல்வேலி தெற்கு- SP.தமிழ்செல்வன் 6.தென்காசி – ஆனந்தன் அய்யாசாமி 7.விருதுநகர் கிழக்கு – G.பாண்டுரங்கன் 8.சிவகங்கை – பாண்டிதுரை 9.மதுரை கிழக்கு – AP.ராஜசிம்மன் 10.மதுரை மேற்கு – K.சிவலிங்கம் 11.திண்டுக்கல் கிழக்கு – D.முத்துராமலிங்கம் 12.தேனி – ராஜபாண்டி 13.திருச்சி நகர் – K.ஒண்டிமுத்து 14.திருச்சி புறநகர் – R.அஞ்சா நெஞ்சன் 15.புதுக்கோட்டை கிழக்கு – C.ஜெகதீசன் 16.அரியலூர் – Dr.A.பரமேஸ்வரி 17.தஞ்சாவூர் வடக்கு – தங்க கென்னடி 18.திருவாரூர் – V.K.செல்வம் 19.மயிலாடுதுறை – நாஞ்சில் R.பாலு 20.கடலூர் கிழக்கு – அக்னி கிருஷ்ணமூர்த்தி 21.கடலூர் மேற்கு – K.தமிழழகன் 22.செங்கல்பட்டு தெற்கு – Dr.M.பிரவீண்குமார் 23.செங்கல்பட்டு வடக்கு – N.ரகுராமன் 24.காஞ்சிபுரம் – தாமரை ஜெகதீசன் 25.திருவள்ளூர் கிழக்கு – S.சுந்தரம் 26.கள்ளக்குறிச்சி – Dr.M.பாலசுந்தரம் 27.வேலூர் – V தசரதன் 28.திருப்பத்தூர் – M.தண்டாயுதபாணி 29.சேலம் நகர் – T.V.சசிகுமார் 30.நாமக்கல் கிழக்கு – K.P.சரவணன் 31.நாமக்கல் மேற்கு – M.ராஜேஷ்குமார் 32.கோயம்புத்தூர் தெற்கு – R.சந்திரசேகர் 33.நீலகிரி – Dr.A.தர்மன் 34.கரூர் – செந்தில் நாதன் 35.சேலம் மேற்கு – ஹரிராமன் 36.தர்மபுரி – சரவணன் 37.திருப்பூர் வடக்கு – KCMB சீனிவாசன் 38.திருவண்ணாமலை வடக்கு – கவிதா 39.திண்டுக்கல் மேற்கு – D.ஜெயராமன் 40.இராணிப்பேட்டை – நெமிலி ஆனந்தன் 41.புதுக்கோட்டை மேற்கு – ராமச்சந்திரன் 42.கிருஷ்ணகிரி மேற்கு – நாராயணன் 43.திருப்பூர் தெற்கு – மோகனப்பிரியா 44.ஈரோடு வடக்கு – S.M.செந்தில் 45.ஈரோடு தெற்கு – செந்தில் 46.நாகப்பட்டினம் – விஜயேந்திரன் 47.சேலம் கிழக்கு – சண்முகநாதன் 48.பெரம்பலூர் – முத்தமிழ் செல்வன் 49.விருதுநகர் மேற்கு – சரவண துரை ராஜா 50.மதுரை நகர் – C.M.மாரி சக்கரவர்த்தி 51.இராமநாதபுரம் – K.முரளீதரன் 52.விழுப்புரம் வடக்கு – K.R. விநாயகம் 53.திருவள்ளூர் மேற்கு -M.அஸ்வின்குமார் 54.திருவண்ணாமலை தெற்கு – K.ரமேஷ் 55.தென் சென்னை – E.சஞ்சீவி 56.சென்னை கிழக்கு – G.குமார் 57.மத்திய சென்னை கிழக்கு – B.கிரி 58.மத்திய சென்னை மேற்கு – S.லதா 59.சென்னை மேற்கு – G.பாஸ்கர் 60.வட சென்னை கிழக்கு – N.L.நாகராஜ் 61.வடசென்னை மேற்கு – TN.பாலாஜி 62.தஞ்சாவூர் தெற்கு – B.ஜெய்சதீஷ் 63.கோயம்புத்தூர் வடக்கு – கரு.மாரிமுத்து
பிரசித்தி பெற்ற மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் 3 வருடத்திற்கு ஒரு முறை மூலவர் சுந்தர ராஜ பெருமாள், தேவியர்களுக்கு திருத்தைலம் சாத்தப்படுவது வழக்கம்.
அதன்படி வரும் தை அமாவாசை 29.01.2025 புதன்கிழமை அன்று காலை 09.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடைபெறவுள்ளது.
இனிவரும் 6 மாத காலங்களுக்கு மூலவருக்கு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறாது ஆகவே தை மாதம் அமாவாசை முதல் ஆடி அமாவாசை முடிய (27.01.2025 முதல் 24.07.2025 வரை ) நித்தியபடி மாலைகள் மற்றும் பரிவட்டம் சாத்துப்படி அனைத்தும் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாளுக்கு (கள்ளழகர்) மட்டும் நடைபெறும்.
வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை நாளில் மூலவருக்கு வழக்கம் போல் பூஜைகளும் தீபாராதனைகளும் 6 மாதங்கள் கழித்தே நடைபெறும்.
எனவே பக்தர்கள் உத்ஸவர் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாளை தரிசித்து அருள்பெற வேண்டுமாய் திருக்கோயில் நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025
இரண்டாவதிலும் வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து அணியை (20 ஓவர்களில் 165/9, ஜாஸ் பட்லர் 45, ப்ரைடன் கார்ஸ் 31, ஜேமி ஸ்மித் 22, ஹாரி ப்ரூக் 13, வருண் சக்கரவர்த்தி 2/38, அக்சர் படேல் 2/32, அர்ஷதீப் சிங், ஹார்திக் பாண்ட்யா, வாஷிங்க்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா தலா 1 விக்கட்) இந்திய அணி (119.2 ஓவர்களில் 166/8, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72, வாஷிங்க்டன் சுந்தர் 26, ப்ரைடன் கார்ஸ் 3/29, ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் வுட், ஓவர்டன், லிவிங்க்ஸ்டோன் தலா 1) இரண்டு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணியை மட்டையாடப் பணித்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (4 ரன்) மற்றும் பென் டக்கட் (3 ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் (30 பந்துகளில் 45 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) நன்றாக ஆடி பத்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ப்ரைடன் கார்ஸ் 17 பந்துகளில் 3 சிக்சர், 1 ஃபோருடன் 31 ரன் எடுத்தார். இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்கள் நிலைத்து ஆடவில்லை எனவே இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்திருந்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் (7 பந்துகளில் 5 ரன்), அபிஷேக் ஷர்மா (6 பந்துகளில் 12 ரன்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 12 ரன்), துருவ் ஜுரல் (5 பந்துகளில் 4 ரன்), ஹார்திக் பாண்ட்யா (6 பந்துகளில் 7 ரன்) ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் திலக் வர்மா (55 பந்துகளில் 72 ரன்) வாஷிங்க்டன் சுந்தர் (19 பந்துகளில் 26 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் இந்திய அணி 20ஆவது ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
திலக் வர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 2-0 என்ற ஆட்டக்கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த ஆட்டம் 28 ஜனவரில் குஜராத் ராஜ்கோட்டில் நடைபெறும்.